தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்களில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட நிலையில், அவருடன் நடித்த பல நடிகர்கள் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு பாக்யாராஜ் இயக்கத்தில் வெளியான தாவனி கனவுகள் என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய மயில்சாமி, தொடர்ந்து, கன்னிராசி, வெற்றி விழா பணக்காரன், சின்னக்கவுண்டர், உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
அதன்பிறகு முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த மயில்சாமி விவேக்குடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்துள்ளார். கடந்த 18-ந் தேதி சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் கோவிலில் விடியும் வரை கண் விழித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து சென்னை
அதே சமயம் அவருடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்காதது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மயில்சாமியின் நெருங்கிய நண்பர் மதன் அளித்த பேட்டி ஒன்றில், வருத்தத்துடன் கூறியுள்ளார். இதில் பேசும் அவர், சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை போகவேண்டியவர் கேளம்பாக்கம் கோவிலுக்கு சென்றார்.
அங்கு இரவு முழுவதும் இருந்து விட்டு அதிகாலை 3.30 மணியில் இருந்து 4 மணிக்கு வீட்டிற்கு வந்த அவர் லேசாக நெஞ்சு வலிப்பதாக தனது மகனிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லும்போது வழியிலேயே உயிர் பிரிந்தது. தகவல் தெரிந்து முதல் ஆளாக அவரது வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதன்பிறகு தான் மற்றவர்கள் வர தொடங்கினார்கள்.
மயில்சாமியின் இறுதிச்சடங்களில் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டிருக்க வேண்டும். என்னதான் பிஸி என்றாலும், ஒரு நேரம் வந்துவிட்டு செல்வதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏன்னா எல்லாரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து செல்லும்போது சின்ன நடிகர்கள் வருவதற்கு என்ன தடை? எல்லோரும் பக்கத்தில் தான் இருக்கிறார்கள்.
மயில்சாமி மரணம் என்ற செய்தி கேட்டவுடன் விதார்த் சித்தார்த் மாதிரியான நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்களிடம் மயில்சாமி எவ்வளவு க்ளோசாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். தப்பா எடுத்துக்காதீங்க வடிவேலு
விவேக் சார் செய்திருக்கிறார். அதனால் தான் அவரது இறுதிச்சடங்களில் அவ்வளவு கூட்டம். அதன்பிறகு ஒரு காமெடி நடிகரின் இறுதிச்சடங்கிற்கு அவ்வளவு கூட்டம் என்றால் அது மயில்சாமிக்குதான். அவர் செய்த களப்பணிகள் தான் இதற்கு முக்கிய காரணம். அதற்காக சேர்ந்த கூட்டம் தான் இது. அவர் பணம் சம்பாதிக்கவில்லை. மக்களைத்தான் சம்பாதித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/