தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் விஜயகாந்த் கோபப்பட்டு தனது உதவியாளரை அறைந்த சம்பவம் குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர் அதை பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என்று திரைத்துரையில் உள்ள பலரும் கூறுவது உண்டு. அதற்கு ஏற்றார்போல் முன்னணி நடிகராக வளர்ந்த விஜயகாந்த் படப்பிடிப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு, சக நடிகர்களுக்கு உதவி, உதவி இயக்குனர்களுக்கு உணவு என திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்.
அரசியலுக்கு வரும் முன்பே தனது நற்பணி மன்றத்தின் கீழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ள விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி குறுகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து அசத்தினார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் மற்றும் சினிமா என அனைத்திலும் ஒதுங்கி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் குறித்து அவருடன் இருந்த பலரும் அவரது இருந்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன் கூறுகையில்,
இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைக்கு நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பேட்டி கொடுக்காமல் திரும்பிவிட்டார் விஜயகாந்த். அதன்பிறகு மறுநாள் நான் மதியம் ஒன்னறை மணியளவில் ஆபீஸ்க்கு செல்கிறேன். அப்போது கேப்டன் சாப்பிட வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.
என்னை பார்த்ததும் என்னப்பா நேற்று நாம் பேட்டி கொடுக்காமல் வந்தது குறித்து எதாவது சொன்னாங்களா என்று கேட்டார். அப்போது நான் ஒரு 2-3 நடிகர்கள் போன் செய்து கேப்டன் மாலை போட்டுவிட்டு பேட்டி கொடுக்காமல் வந்துவிட்டார் என்று கூறியதாக சொன்னேன். அப்போது கேப்டனின் உதவியாளர் பார்த்த சாரதி கேப்டன் பின்னால் இருந்து சொல்லாதே சொல்லாதே என்று கை காண்பித்தார். நான் அதை பார்த்தபோது கேப்டன் என் பார்வை அங்கு சென்றதை கவனித்தார்.
உடனே பின்னால் திரும்பி பார்த்தபோது பார்த்த சாரதி கை அசைத்ததை பார்த்துவிட்டு கோபத்தில் பளார் என்று அறைவிட்டார். இப்படித்தான் அனைத்தும் என்னிடம் இருந்து மறைத்துவிடுகிறீர்களா என்று கேட்டார். அதன்பிறகு அதேகோபத்துடன் காரில் ஏறி சென்றுவிட்டார். அப்போது நான் அவரிடம் சென்று விசாரித்தபோது அவர் அழுதபடியே நீங்கள் பேட்டி கொடுத்திருந்தால் நல்லாருந்துருக்கும் என்று சொன்னோம் என்று சொன்னார்கள்.
அதன்பிறகு நான் அவரிடம் சாரி என்று சொன்னபோது வீட்டில் இருந்து கேப்டன் போன் செய்கிறார். ரிசப்சனில் இருந்தவரிடம் மட்டன் சிக்கன், மீன் நண்டு என சாப்பாடு வாங்கி பார்த்த சாரியிடம் கொடுக்க சொன்னார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“