அடுத்த நடிகர் திலகம், அடுத்த மக்கள் திலகம் என்று எப்படி யாரையும் சொல்ல முடியாதே அதேபோலத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற பேச்சு வரும்போதேல்லாம் ஒரு சாரார் அதற்கு ஆதரவும் ஒரு சாரார் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கருத்தில் திரைத்துறையில் உள்ள சிலருக்கே உடன்பாடு இல்லை.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவிற்கு ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிகாந்த் தான் என்று தங்களுக்கு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் சொல்லி வருவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரே சூப்பர் ஸ்டார்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட அஜித் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து சண்டை போட்டுக்கொண்டனர். ஆனால் சூப்பர் ஸடார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. தற்போதைய சினிமாவில் சிவாஜி, கமல் நடிப்பு மற்றும் ரஜினிகாந்த் சாயல் இல்லாமல் ஒரு நடிகரும் இல்லை.
இப்போது விஜய் ரஜினியை பின் தொடர்கிறார். ரஜினி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜப்பான் போனா கூட அவரை தெரியும். ஆனால் விஜயை ஜப்பானில் தெரியுமா? விஜய் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிந்தவர். ஆனால் ரஜஜினிகாந்த் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தெரிந்தவர். இதுதான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

1995-ம் ஆண்டு விஸ்வா என்ற படத்தின் பூஜைக்கு வந்த ரஜினிகாந்தை விஜய் எப்படி வரவேற்றார் என்பது தெரியும். ரஜினி காரில் இருந்து இறங்கும்போது விஜய் அவசர அவசரமாக சென்று அவரை வணங்கி வரவேற்றார். அப்போது அவர் முன் விஜய் கையை கட்டிக்கொண்டு நின்றார். விஜய் எப்போதும் தனிமையில் தான் இருப்பார். ஆனால் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமடாக பழகக்கூடியவர். விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு அவருக்கு தோல்வி. அதனால் 2-வது படமாக செந்தூர பாண்டி படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்காக விஜயகாந்த் நடித்து கொடுத்தார்.
இது குறித்து விஜய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். இன்றைக்கு நான் இவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான். அதனால் கேப்டன் இல்லை என்றால் இன்று விஜய் இல்லை. செந்தூரபாண்டி நடித்த சமயத்தில் விஜயகாந்த் மிகப்பெரிய நடிகர். ஆனாலும் விஜய் படத்தில் நடித்தார். ஆனால் இன்று விஜயகாந்த் மகன்களுக்கு விஜய் இப்படி செய்வாரா அந்த மனசு அவருக்கு இருக்கா என்று கேட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil