தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி அரசியலில் முதலவராக உயர்ந்தவர் தான் கலைஞர் மு.கருணாநிதி. அவர் மட்டுமல்லாமல், அவரது மகனும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் சினிமாவில் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். அந்த வகையில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு முன்பே சினிமாவில் நடிகராக உயர்ந்தவர் தான் மு.க.முத்து.
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனாக மு.க.முத்து, 1948-ம் ஆண்டு பிறந்தவர். 1944-ம் ஆண்டு பத்மாவதி என்பரை கருணாநிதி திருமணம் செய்துகொண்டார். 4 வருடங்கள் கழித்து மு.க.முத்து பிறந்தவுடன் அவர் பிரசவ வேதனையில் இறந்துள்ளார். அதன்பிறகு, தாயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் என இருவரை திருமணம் செய்துகொண்டார் கலைஞர். மு.கருணாநிதி.
1972-ம் ஆண்டு வெளியான பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமான மு.க.முத்து, அடுத்து பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த அவர், திரையில் எம்.ஜி.ஆரை போலவே நடித்ததால், எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் என்று பலரும் கூறி வந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் எம்.ஜி.ஆர் காதுக்கு சென்றபோது, மு.க.முத்துவை அழைத்த எம்.ஜி.ஆர் என்னை போல் திரைப்படங்களில் நடிக்காதே உனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
மு.க.முத்துவை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க நினைத்த கருணாநிதி, அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் தனி கட்சி தொடங்கியதால், அவருக்கு போட்டியாக மு.க.முத்துவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியதாகவும் தகவல்கள் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மு.க.முத்துவுக்கு திரைப்படம் கைகொடுக்கவில்லை. கடைசியாக அவர். 1977-ம் ஆண்டு வெளியாக எல்லாம் அவளே என்ற படத்தில் நடித்திருந்தார். தன்னை போலவே நடிக்கதாக கூறப்பட்டு வந்த விமர்சனங்கள் குறித்து எம்.ஜி.ஆர் மு.க.முத்துவுக்கு அறிவுரை கூறியதாக, மு.க.முத்துவின் மனைவி, சிவகாமசுந்தரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“