தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக அறியப்பட்ட நம்பியாரை பாசிட்டீவ் கேரக்டரில நடிக்க அழைத்த தன்னை வெளியில் போக சொன்னதாக நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நம்பியார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்து படங்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு இணையாக முக்கியத்தவம் பெருபவர் நம்பியார். இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர். சிவாஜி நடித்த பெரும்பாலான படஙகளில் வில்லன் நம்பியார் தான்.
காமெடி வில்லன் சீரியஸ் வில்லன் என வில்லன் ரோலை கூட வித்தியாசமாக செய்து பாராட்டுக்களை பெற்றவர் நம்பியார். இவர்கள் மட்டுமல்லாமல் பழங்காலத்து நடிகர்கள் பலருடன் இணைந்து வில்லன் ரோலில் கலக்கியுள்ள நடிகர் நம்பியார் பின்னாளில் காமெடி மற்றும் குணச்சித்தி வேடங்களில் தனது நடிப்பின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தினார்.
இதில் விஜயுடன் பூவே உனக்காக, பிரஷாந்துடன், வின்னர், சரத்குமாருடன் மூவேந்தர் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். கொடூர வில்லனாக இருந்து காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான நம்பியார் மாறியதற்கு முக்கிய காரணம் நடிகர் பாக்யராஜ்தான். தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்த நம்பியாரை தனது தூரல் நின்னு போச்சு படத்தின் மூலம் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக கொண்டு வந்தார்.

இந்த படத்தில் நம்பியாரை எப்படி நடிக்க வைத்தார் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதில் தூரல் நின்னு போச்சு படத்தில் நடிப்பதற்காக அவரை தேடி அவர் வீட்டுக்கு போனேன். அவரது வீட்டில் இருந்தவர்கள் என்ன அமர வைத்து அவர் வருவார் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
சில நிமிடங்கள் கழித்து நம்பியார் சாதாரனமாக வந்தார். வந்தவுடன் என்ன கதை என்ன கேரக்டர் என்று கேட்டார். கராத்தே மாஸ்டர் கேரக்டர் என்று சொன்னேன். நெகடீவ்வா பாசிட்டீவா என்று கேட்டார். பாசிட்டீவ் கேரக்டர் என்று சொன்னதும் அதிர்ச்சியான அவர் பாசிட்டீவா அது செட்டாகாது நீ கௌம்பு என்று சொல்லிவிட்டார். ஆனால் இது நல்ல கேரக்டர் நல்ல படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த கேரக்டரில் நீங்கள் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தேன்.
ஆனாலும் நம்பிக்கை இல்லாத அவர், பலமுறை என்னிடம் கேட்டார். இந்த கேரக்டர் எனக்கு செட் ஆகுமா மக்கள் எல்லாம் என்னை வில்லனாக பார்த்தே பழகிவிட்டார்கள். இந்த கேரக்டரை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டார். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த படத்திற்கு பிறகு நீங்கள் இது மாதிரி பல கேரக்டர் செய்வீர்கள் என்று சொன்னேன் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
வில்லன் ரோலில் தனக்கென தனி முத்திரை பதித்த நம்பியார் தூரல் நின்னு போச்சு படத்தின் மூலம் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/