/tamil-ie/media/media_files/uploads/2023/04/MS-Bhasakar-Sarathkumar.jpg)
எம்.எஸ்.பாஸ்கர் - சரத்குமார்
ராதிகாவுடன் நடித்த சீரியலை பார்த்த சரத்குமாரும் நெப்போலியனும் தன் மீது கடுமையாக கோபப்பட்டதாக நடிகரும் டப்பிங் கலைஞருமான எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.
திரையுலகில் விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எம்.எஸ்.பாஸ்கர், தொடர்ந்து, விசு இயக்கிய அடுத்தடுத்த படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த இவர் தான் நடித்து வரும் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் வேலையையும் செய்து வந்துள்ளார்.
திரையுலகில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக எம்.எஸ் பாஸ்கர், 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் இவர், முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர கேரக்டர்களிலும் அசத்தி வருபவர் எம்.எஸ்.பாஸ்கர்.
திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக என்ட்ரி ஆகி பின்னாளில் நடிப்பு சித்தர் என்று பெயர் பெற்ற எம்.எஸ். பாஸ்கருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது சீரியல் தான். ஸ்ரீபிரியா நிரேஷா நடிப்பில் வெளியான சின்னபாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பட்டாபி என்ற கேரக்டர் இன்றளவும் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய ஒரு கேரக்டராக உள்ளது.
அதன்பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு அதிகரித்து வந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த எம்.எஸ்.பாஸ்கர், ராதிகாவின் தயாரிப்பில் வெளியான செல்வி என்ற சீரியலில் வில்லனாக நடித்துள்ளார். 2005-06 ஒளிபரப்பான செல்வி சீரியலில் ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் கேரக்டரில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் பலரின் வெறுப்பை சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இது குறித்து பேசியுள்ளார். இதில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடி வேடத்தில் நடித்தபோது செல்வி தொடரில் நான் வாய்ப்பு கிடைத்து. இந்த தொடரில் ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் வேடத்தில் நடித்தேன். இதில் நடித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் காமெடியாக பார்த்து ரசித்த பலரும் வில்லனாக நடிப்பது ஏன் என்று கேட்க தொடங்கிவிட்டனர். என் மனைவி சாப்பாடு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதேபோல் என் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து என்னை அழைத்து வில்லன் ரோலில் நடிப்பது குறித்து திட்டினார்கள். இதையெல்லாம் விட நடிகர் சரத்குமார் நெப்போலியன் இருவருமே என்னிடம் கோபப்பட்டார்கள். பட்டாபியாக ரசிக்க வைத்த நீ இப்போது வெறுப்பை ஏற்படுத்திவிட்டாய் உன் மூஞ்சில் விஷம் சொட்டுது என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த செல்வி தொடரை நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.