scorecardresearch

என்னுடைய செலிப்ரிட்டி மாணவர்கள் தான்… ஜி.வி.பிரகாஷ் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

ஆயிரத்தில் ஒருவன் இசை கச்சேரி வரும் ம மே மாதம் “27 ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசைக் கச்சேரி நடத்துகிறார்.

என்னுடைய செலிப்ரிட்டி மாணவர்கள் தான்… ஜி.வி.பிரகாஷ் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி வரும் மே மாதம் 27″ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையெட்டி கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  லோகோ லான்ச் மற்றும் டிக்கெட் அறிமுகம் விழா நடைபெற்றது

கிருஷ்ணா கல்வி குழுமம்  மற்றும்  எம்.கே. என்டர்டைன்மென்ட் இணைந்து நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை கச்சேரி வரும் ம மே மாதம் “27 ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் நடிகரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  இசைக் கச்சேரி நடத்துகிறார். இதில் கிருஷ்ணா கல்லூரி  குழுமம் நிர்வாக இயக்குனர் மலர்விழி  மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜி.வி.பிரகாஷ் நான் ஸ்கூல்  படிப்பில் பாஸாகி விடுவேன் அதே போல் தான் கல்லூரியிலும்  இருந்தேன் எனக் கூறினார். மேலும் எனக்கு எல்லா ஆர்டிஸ்ட்  பிடிக்கும் எனவும்  என்னுடைய செலிப்ரிட்டி மாணவர்கள் தான். சிக்கு புக்கு பாடல் மூலம் எனது வாழ்க்கையை தொடங்கினேன். சின்ன வயதில் அந்த பாடலை பாடினேன்.

பின்னர் தற்போது வாத்தி திரைப்படத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ள ஒரு தலை காதல் தந்தேன் என்ற பாடல் பாடி  மாணவர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டளை பெற்றார். தொடர்ந்து யாத்தி யாத்தி என்ற பாடலும் பாடினார் வெள்ளாவி வைத்து தான் வெளுத்தார்களா கீ போர்டு மூலம் இசையமைத்து பாடலும் பாடினார்.

ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் வரும் மே மாதம் 27″ ஆம் தேதி நடைபெறுகிறது அங்கு நாம் சந்திப்போம் என தெரிவித்து மேடையில் இருந்து விடைபெற்றார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor musican gvprakash music program update

Best of Express