தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்திருந்த நடிகர் நாகேஷ், சிறுகதை மன்னன் ஜெயகாந்தனுடன் இணநை்து ரயில் சிக்னலில் பிச்சை எடுத்த சம்பவம் பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் திரையுலகில் எழுத்தாளர், இயக்குனர், சிறுகதை மன்னன் என பல திறமைகளை உள்ளடக்கியவர் ஜெயகாந்தன். இவருக்கும் நடிகர் நாகேஷூக்குமான நட்பு மிகவும் நெருக்கமானர். ஜெயகாந்தன் இயக்கிய யாருக்காக அழுதான் எற படத்தில் நாகேஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
தனது எதிர்நீச்சல் நாடகத்தினை பார்க்க வரவேண்டும் என்று நாகேஷ் ஜெயகாந்தனை நேரில் சென்று அழைத்துள்ளார். இதுதான் நாகேஷ் ஜெயகாந்தன் இவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு. அதேபோல் ஜெயகாந்தன் எழுதிய, யாருக்காக அழுதான் என்ற கதையை தழுவிதான் கே.பாலச்சந்தர் எதிர்நீச்சல் கதையை எழுதியுள்ளதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அதன்பிறகு எதிர்நீச்சல் நாடகத்தை பார்க்க வந்த ஜெயகாந்தன், நாடகம் முடிந்தவுடன், அதில் நடித்த அத்தனை கலைஞர்களையும் பாராட்டி பேசிதோடு மட்டுமல்லாமல், எனது யாருக்காக அழுதான் கதைக்கும் இந்த எதிர்நீச்சல் கதைக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என்று அறிவித்துவிட்டார். அன்றில் இருந்து நாகேஷ் – ஜெயகாந்தன் இடையே நட்பு நெருக்கமாக மாறியது.
அதன்பிறகு தான் இருவரும் இணைந்து யாருக்காக அழுதான் என்ற படத்தை உருவாக்கினார்கள். இந்த படம் நடிக்கும்போது நாகேஷ் பிஸியான நடிகராக வலம் வந்ததால், அவரின் வசதிக்காக இயக்குனர் ஜெயகாந்தன் படத்தின் படப்பிடிப்பை பல நாட்கள் இரவிலேயே வைத்துள்ளார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவாகி இருந்தது.
ஒருமுறை வெளியூர் போய்விட்டு ஜெயகாந்தனும், நாகேஷூம் காரில் சென்னை திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது தொழுப்பூர் ரயில்வே கேட் அருகே, ரயில் கிராசிங்கிற்காக கார் நிறுத்தப்பட்டது. அப்போது இருவரும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நிலையில், ஜெயகாந்தன் நாகேஷை பார்த்து இப்போ என்ன பண்ணலாம் என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், பிச்சை எடுக்கலாமா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாகேஷ் என்ன சொல்றீங்க என்று கேட்பதற்குள், ஜெயகாந்தன் தனது சட்டை பேண்ட்டை கழற்றிவிட்டு காரில் இருந்து வெளியே இறங்கியுள்ளார்.
அவரை பார்த்த நாகேஷூம் அன்டர்வேருடன் காரில் இருந்து இறங்கி ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்துள்ளார். ரயில்வே கேட் ஓப்பன் ஆகும் வரை இருவரும் பிச்சை எடுத்துள்ளனர். இவர்கள் அன்டர்வேருடன் இருந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதன்பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்ட நிலையில், இருவரும் காரில் ஏறி பிச்சை எடுத்த காசை எண்ணி பார்த்துள்ளனர்.
அப்போதும் கூட நாகேஷைவிட ஜெயகாந்த்ன் அதிகமாக பிச்சை எடுத்திருந்தார். இந்த தகவலை நடிகர் நாகேஷ் ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிக்கையாளரும், சினிமா இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“