நடிப்பில் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் எம்ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களுக்குகே லேட்டாக வரும் நாகேஷ், அதனை எப்படி சாமாளிப்பார் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பினை பெற்று காமெடியில் கலக்கிய நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நடிகர்கள் முக்கியமானவர். எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் இருந்து விலகும் வரை நாகேஷ்க்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்து தமிழகத்தின் முதல்வர் என்ற அரியனையில் அமர்ந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
காமெடி நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், சில படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ள நாகேஷ், நடிப்பில் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் ஒரே நாளில் 5 படங்களுக்கு மேல் நடித்து வந்துள்ளார். இதனால் ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மற்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரையும் காக்க வைத்துள்ளார் நாகேஷ்.
இப்படி படப்பிடிப்புக்கு லேட்டாக வந்தால் எம்.ஜி.ஆர், சிவாஜியை எப்படி சமாளிப்பீர்கள் என்று ஒரு நிரூபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நாகேஷ், எம்.ஜி.ஆரை சமாளிப்பது எளிது. ஆனால் சிவாஜியை சமாளிப்பது அப்படி அல்ல. அவர் நான் லெட்டாக வந்தது பற்றி நேரடியாக எதுவும் கேட்கமாட்டார். இடைவேளை நேரத்தில் சாப்பிடும்போது அல்லது வேறு ஏதேனும் ஜாலியாக இருக்கும்போது மறைமுகமாக நான் லேட்டாக வந்தது குறித்து சொல்லிவிடுவார்.
சிவாஜிக்கு நேர் எதிரானவர் எம்.ஜி.ஆர், நான் எந்த சூழ்நிலையில், எப்படி நடிக்க வருகிறேன் என்று அவருக்கு நன்கு தெரியும் என்பதால், படப்பிடிப்பில் நான் நடிக்கும் காட்சிளை மட்டும் விட்டுவிட்டு மற்ற காட்சிகளை படமாக்கிவிடுவார். பிறகு நான் படப்பிடிப்புக்கு சென்றவுடன் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்குமாறு சொல்வார் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“