Advertisment

நாயகனாக முதல் படம்... நாயகியை அழ வைத்த நாகேஷ் : அப்படி என்ன செய்தார்?

ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் சுந்தரம்.

author-image
WebDesk
New Update
Nagesh

நடிகர் நாகேஷ்

தனது காமெடியால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டி நடிகர் நகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் என்ற படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் முதலில் நாடகமாக உருவான நிலையில், இந்த நாடகத்தை எழுதிய கே.பாலச்சந்தர் என்ன நிலைமையில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை.

Advertisment

தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ்எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இதனிடையே தான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்திலும் நாடங்களில் தொடர்ந்து நடித்து வந்த நாகேஷ், கே.பாலச்சந்தரின் ஒரு நாடகத்தில் நடித்தார். அன்று முதல் பாலச்சந்தர் தான் தனக்கு சரியான ஆள் என்று முடிவு செய்த நாகேஷ் அன்று முதல் அவர் நாடக குழுவில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தினமும் பாலச்சந்தரை சந்தித்து, நான் உன் நாடக முழுவில் சேர்ந்துகொள்ளட்டுமா என்று கேட்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நாகேஷ்க்கு பட வாய்ப்பு குவியும் என்று நினைத்த கே.பாலச்சந்தர், நெஞ்சில் ஓர் ஆலயம் படம் நல்ல ஓடிட்டு இருக்கு இந்த நேரத்தில் நீ என் நாடகத்தில் நடித்தால் அது சரியாக இருக்காது. அப்படியும் நடிக்க வேண்டும் என்றால் உன்னையே முதன்மை கேரக்டராக வைத்து நான் ஒரு நாடகத்தை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் சுந்தரம். அதுவரை காமெடி நடிகராகவே பார்த்து பழக்கப்பட்ட நாகேஷ், சீரியஸான கேரக்டரில் நடித்தால் சரியாக இருக்குமா? அவழன மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கே.பாலச்சந்தர் யோசித்தபடி நின்றுகொண்டிருந்துள்ளார்.

நாடகம் தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நாகேஷை சந்தித்த பாலச்சந்தர், டேய் எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை. நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும் என்று சொல்ல, டேய் பாலு எனக்கு முதல் சீன் எதுனே மறந்துபோச்சி என்று நாகேஷ் கூறியுள்ளார். ஆனாலும் நாடகம் தொடங்கிபோது கையில் அடுக்கிய டபரா செட்டுடன் நாகேஷ் வருவதை பார்த்த ரசிகர்கள் கைத்தட்டி நாகேஷ் நாகேஷ் என்று கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

இப்போதே இந்த நாடகம் பாதியளவு வெற்றி என்று உறுதி செய்த கே.பாலச்சந்தர், நாகேஷ் சீரியஸான காட்சியை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசித்தார். அதன்படி சர்வராக இருந்து நடிகனாக உயர்ந்த நாகேஷ் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல ஒரு பூங்கொத்துடன் போய் தனது காதலை வெளிப்படுத்த அவர் தான் உங்களை ஒரு நண்பனாகத்தான் பார்த்தேன் என்று சொல்லிவிடுவார். அப்போது நாகேஷ் ஏமாற்றத்துடன் திரும்பும்போது கையில் ஒரு குப்பை கூடையை எடுத்துக்கொண்டு வருவார்.

இதை பற்றி கேட்டபோது நான் கொடுத்த பூங்கொத்தை நீங்கள் மறந்தும் இதில் போட்டுவிடாதீங்க அதுக்காகத்தான் எடுத்துச்செல்கிறேன் என்று சொல்ல, நாயகி கதறி அழுவார். இந்த காட்சியை பார்த்து அந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பலரும் அழுதுள்ளனர். அதன்பிறகு தான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. நாகேஷ் கே.ஆர்.விஜயா முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

actor nagesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment