ரூ1000-ல் திருமணம், மனைவி கிறிஸ்டியன்; 3 மதத்தில் மருமகள்கள், நாகேஷ் வீட்டின் தேசிய ஒற்றுமை தெரியுமா?

மூத்த பிள்ளை, கிறிஸ்டியன் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 2-வது மகன், முசல்மான் பெண்ணை கல்யாணம் செய்தார். 3-வது பையன் ஸ்மார்ட்டா ஐயர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

மூத்த பிள்ளை, கிறிஸ்டியன் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 2-வது மகன், முசல்மான் பெண்ணை கல்யாணம் செய்தார். 3-வது பையன் ஸ்மார்ட்டா ஐயர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Nagesh Sarvar

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகராக இருக்கும் நாகேஷ் தனது திருமணம், மற்றும் மகன்களின் திருமணம் குறித்து பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக, தனது ரயில்வே வேலையை ராஜினாமா செய்த நாகேஷ், சினிமாவில் உச்சம் தொட்ட காமெடி நடிகராக மக்கள் மனதில் இன்றும் வாழந்துகொண்டு இருக்கிறார், காமெடி மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள நாகேஷ்க்கு, ஆனந்த் பாபு உட்பட 3 மகன்கள் உள்ளனர். 1957-ம் ஆண்டு ரெஜினா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நாகேஷ் தனது மகன் ஆனந்த் பாபு நடிப்பில், பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு தனது 75வயதில் மரணமடைந்த நாகேஷ் குறித்து இன்றைய கால திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் அவ்வப்போது பல்வேறு நிகழ்வகளை கூறி வருகின்னறனர்.

அதேபோல் இவர் நேர்காணல் கொடுத்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில், தனது திருமணம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து நாகேஷ் பேசியுள்ளார். வாகினி ஸ்டூடியோவில் பல படங்கள் எடுத்திருக்கிறார்கள். அதில் குண்டமகதா என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். தமிழில் என் நடிப்பை பார்த்து தெலுங்கிலும் என்னையே நடிக்க வைத்தார்கள். இந்த படத்தில் எனக்கு வசனம் இல்லை என்பதால் தெலுங்கில் நடிக்க சொன்னார்கள்.

Advertisment
Advertisements

படப்பிடிப்பு முடிந்தவுடன், நாகி ரெட்டியார் என்னை அழைத்து. எவ்வளவு சம்பளம் சொன்னார்கள் என்று கேட்டார். நான் ரூ250 என்று சொன்னவுடன், 2 மொழியில் நடிச்சிருக்கே அப்போ ரூ500 சம்பளம் என்று சொல்லிவிட்டு, இப்போவே வேண்டுமா என்று கேட்டார், அடுத்த வாரம் கல்யாணம் இருக்கு சார் என்று சொன்னேன். யாருக்கு என்று கேட்க எனக்குதான் என்று சொன்னவுடன்,உடனடியான ரூ1000 செக் எழுதி கொடுத்தார். அந்த பணத்தை வைத்து தான் என் மனைவிக்கு, தாலி, பட்டுப்புடவை, எனக்கு பேண்ட், சார்ட் எல்லாம் எழுத்தோம்.

முதலில் ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் செய்துகொண்டு, அதன்பிறகு வட பழனி கோவிலுக்கு சென்று திருமணம் செய்தோம். வெளியில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ரூ5 கொடுத்துவிட்டு, திருப்தியா சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேம். இன்றைய வரைக்கும் நானும் என் மனைவி ரெஜினாவும் சந்தோஷமா இருக்க காரணம் நாகி ரெட்டியார் கொடுத்த அந்த ரூ1000 பணம் தான். என் மனைவி கிறிஸ்டியன், நான் பிராமின், எனக்கு 3 பிள்ளைகள் பிறந்தார்கள்.  

மூத்த பிள்ளை, கிறிஸ்டியன் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 2-வது மகன், முசல்மான் பெண்ணை கல்யாணம் செய்தார். 3-வது பையன் ஸ்மார்ட்டா ஐயர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மொத்தத்தில் நேஷ்னல் இன்டக்ரேஷன் என் வீட்டுக்குள்ளே இருக்கிறது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: