இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று போற்றப்படும் நடிகர் நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தர் குறித்து மேடையில் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் என்றால் நிச்சயமாக நாகேஷ்க்கு முக்கிய பங்கு உண்டு. கவுண்டர் டைலாக் இல்லாமல் உடல் அசைவில் மற்றவர்களை சிரிக்கவைப்பது எப்படி என்பதை நன்கு அறிந்திருந்த அவர், 1959-ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிவாஜி, உள்ளிட்ட தனது சமகால நாயகர்களுடன் மட்டுமல்லாமல் ரஜினி, கமல், விஜய் அஜித், சிம்பு தனுஷ் உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகளுடனும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உட்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இவருக்கும், இயக்குனர் கே. பாலச்சந்தருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களில் பணியாற்றியுள்ள நிலையில், நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட படங்களில் நாகேஷ் நாயகனாக நடிக்க கே.பாலச்சந்தர் இயக்கியுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
நகைச்சுவை நடிகர், நாயகன் மட்டுமல்லாமல் அபூர்வ சகோதரர்கள், அதிசய பிறவி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். நாகேஷ். மேலும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவரது மகன் ஆனந்த் பாபு நாயகான நடித்திருந்தார். கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசவதாரம் படத்தில் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு மேடை நிகழ்ச்சி ஒன்றில் நாகேஷ் தனது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான பாலச்சந்தர் குறித்து பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதில் பேசும் நாகேஷ்,
இப்போதேல்லாம் விழா எடுக்கனும் என்றால்ஒருவன் விழாமல் இருக்க விழா எடுத்துவிடுகிறார்கள் என்று தனக்கே உரிய பேச்சுடன் தொடங்கும் அவர், கே.பாலச்சந்தர் என்னுடைய உயிர் நண்பர் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னை பார்த்து அவர் ரசிப்பார் அவரை பார்த்து நான் ரசிப்பேன். நான் நினைப்பதை அவர் எழுதுவார். அவர் எழுதியதில் நான் எதாவது சொன்னால் அதைத்தான் நான் நினைத்தேன் என்று சொல்லுவார்.
எங்களுக்குள் உள்ள உறவு அனைத்தும் ஒத்து போய்கிட்டே இருக்கும். எஙகளுக்குள் நெருக்கம் வந்ததற்கு சில காரணங்கள் இருக்கு. அவர் ஒரு டைலாக் எழுதி இருக்கும்போது நான் அதில் குறுக்கே வருவேன். அந்த மாதிரிதான் எதிர்நீச்சல் படத்தில் கிணத்து மேட்ல உட்கார்ந்து நான் ஒரு சாதாரண மரக்கட்டை என்று சொல்வேன்.
அதற்கு ஒருவர் என்னை பைத்தியம் இல்லனு நிரூபிச்சதே நீ தானே அப்புறம் எப்படி நீ மரக்கட்டைனு சொல்ற என்று கேட்பார். உடனே நா சொல்வேன். ஒரு மரக்கட்டை வச்சி கரையேறுனோன்ஙற காரணத்துனால மரக்கட்டையேவே தெய்வமா வச்சி பூஜிக்க முடியுமா, இல்ல வாழ்நாள் பூர வாச்சி கொண்டாட முடியுமா? என்ன மறந்துருப்பாங்க என்று சொல்வேன்.
இந்த டைலாக் ரிகர்சல் பார்க்கும்போது கே.பி.சார் அப்படி வந்தாரு. அப்போ நான் அவரை பார்த்து சிரித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து என்ன ராவ்ஜி என்ன என்று கேட்டார். அதற்கு நான் இல்ல டைலாக் நல்லாருக்கு என்று சொன்னேன். அப்போது அவர் நல்ல இருக்குனா சொல்லி தொலையேன் என்று சொன்னார்.
அப்போது நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல மரக்கட்டை பிடிச்சி கரையேறுனோம்ங்றதுனால அதையே தெய்வமா வச்சி பூஜிக்க முடியுமா இல்லா வாழ்நாள் பூரா வச்சி கொண்டாட முடியுமா அப்படி நான் சொல்லனும் என்று சொன்னேன். அதற்கு அவர் சொல்லேன்பா எவ்யே கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன் சொல்லித்தொலையேன் என்று சொன்னார்.
இல்ல நான் மாடிப்படிக்கு கீழ இருக்க பையன் பரிட்சைக்கு கூட போக முடியல புத்தகத்தை எல்லாம் திருடிடுறாங்க நான் பாஸ் மார்க் வாங்குறதே கஷ்டமாக சூழ்நிலையில் வீட்டு வேலையெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கேன். இதுல இவ்ளோ பெரிய விஷயத்தை நான் சொல்ல முடியுமா மக்கள் ஏத்துப்பாங்களா இல்ல கொஞ்சம் எளிமைய எதாவது சொல்லலாமா? என்று சொன்னேன்.
அதற்கு அவர் இப்போ என்ன பண்ண சொல்ற நீ என்று கேட்க ஒன்னும் இல்ல நீங்க பேச சொன்ன பேசுறேன் என்று சொன்னேன் ஆனால் அவர் பேக்கப் என்று சொல்லி பேக் பண்ணிட்டாரு. உடனே நானும் போயிட்டேன். நான் போனதுக்கு அப்புறம் என்னை கூப்பிட்டுருக்காரு நான் இல்லனு சொல்லிட்டாங்க.
மறுநாள் நான் வந்தேன். அப்போது கே.பி சார் ராவ்ஜி இந்த டைலாக் ரொம்ப நல்ல டைலாக். உன் வாயால சொன்ன டைமிங்கோட ரொம்ப நல்லாருக்கும். சொல்லித்தொலையேன் இழவ கூட்டாத அப்டினு சொன்னாரு. அதுக்கப்புறம் அதை பேசினேன். இப்படி ஒருத்தர் ஒருத்தர் சண்டை போட்டுக்கொண்டே எங்களது நட்பு வளர்ந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“