scorecardresearch

நாகேஷூடன் சண்டை… தேங்காய் சீனிவாசன் நடிப்பில் படம் : கே.பாலச்சந்தர் ப்ளாஷ்பேக்

நாகேஷின் இடத்தை தற்போதுவரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்று கூட சொல்லலாம்.

K balachandar
கே.பாலச்சந்தர் – நாகேஷ்

தமிழ் சினிமாவில் டைமிங் காமெடிக்கு பெயர் பெற்றவர் நாகேஷ். பிளாக் அன்ட் வொயிட் காலத்தில் இருந்து டிஜிட்டல் சினிமா வரை தனது சிறப்பாக காமெடியின் மூலம் அசத்திய இவர் குணச்சித்திர வேடங்களிலும் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் பிறமொழி நடிகர்களுக்கு தனது தனிதிறமை மூலம் நீங்க இடம் பெற்ற நாகேஷ், ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அதேபோல் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல் தொடங்கி விஜய் அஜித் சிம்பு உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நாகேஷ் தனது இறுதி மூச்சுவரை சினிமாவில் தனக்காக இடத்தை தக்கவைத்திருந்தார். அவரது இடத்தை தற்போதுவரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்று கூட சொல்லலாம்.

ராகேஷின் அனுபவி ராஜா அனுபவி படத்தை இந்தியில் எடுத்தபோது இதில் நாகேஷ் கேரக்டரில் நடித்த நடிகர் மெஹ்மூத்த நாகேஷின் காலில் விழுந்த வணங்கிய நிகழ்வும் அரங்கேறியுள்ளது. கலைவான என்ஸ் கிருஷ்ணனுக்கு அடுத்து சிறந்த கலைஞர் என்று போற்றப்பட்ட நாகேஷ், எதிர்நீச்சல் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இதில் 1964-ம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தனர். இந்த படத்திற்கு கதை கே.பாலச்சந்தர் எழுதியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த நாகேஷ், கடந்த 2009-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மரணத்தின் போது இயக்குனர் கே.பாலச்சந்தர் எழுதிய கடித்தத்தில்,

சர்வர் சுந்தரம் படம் நாகேஷ்க்காக எழுதப்பட்ட கதை. அந்த படத்திற்கு முன்பே அவர் பல படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமாகியிருந்தார். ஆனால் காமெடியனாக நடித்து இதில் செண்டிமென்ட் கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்று்ககொள்வார்களா என்ற தயக்கம் இருவருக்குமே இருந்தது, ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம்.

நீர்குமிழி படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பததால் கேன்சரால் பாதிக்கப்படும் நபராக நடித்திருப்பார். அப்போது நானே செயின் ஸ்மோக்கர். புகைப்பழக்கத்திற்கு எதிராக பேச வேண்டும் என்பதால் அந்த படத்தை இயக்கினேன். வெள்ளி விழா படத்தின் போது நாகேஷ்க்கும் எனக்கும் பிரச்சனை. அவரால் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த படத்தில் தேய்காய் சீனிவாசனை நடிக்க வைத்து இயக்கினேன்.

பாதி படத்தின் போதே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. பைபாஸ் சர்ஜரி முடிந்து 3 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். மனக்கசப்பு இருந்தபோதும் நாகேஷ் மருத்துவமனையில் வந்து என்னை பார்த்து என் மனைவிக்கு ஆறுதல் சொன்னதார். அப்போதுதான் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினேன். சிகரெட நாகேஷ் இருவரையும் பிரிந்து இருந்த காலம் அது. நாகேஷ் டைமிங் சென்ஸ் அலாதியானர்.

பூவா தலையா படத்தில் ஒரு காட்சியில் அவர் தனது மாமியாரிடம் குழை கும்பிடு போட்டு வணங்க வேண்டும். இந்த காட்சியில் தரைவரை கும்பிடு போட்ட நாகேஷ் இதற்கு மேல் முடியாது தரை வந்துவிட்டது என்று சொன்னார். செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டோம். இந்த டைலாக் ஸ்கிரிப்ட் பேப்பரில் இல்லை. இன்றுவரை அதுபோன்ற ஒரு நடிகர் டைமிங் சென்ஸ் கைகூடவில்லை.

ஆனால் அரசின் சார்பாக நாகேஷ்க்கு இதுவரை விருது வழங்கப்படாதது நமக்குதமாக் அவமானம். இன்று நாகேஷ் இல்லை என்பது ஏதோ ஒரு தனிமை உணர்வில் என்னை ஆழ்ப்படுத்துகிது. நீர்குமிழி படத்தில் இடம்பெற்ற ஆடி அடங்கும் வாழக்கையடா என்ற பாடல் தான் இப்போதைக்கு எனக்கு மருந்து என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் எழுதியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor nagesh timing comedy k balachandar flashback letter