Advertisment
Presenting Partner
Desktop GIF

கேட்ட சம்பளம் தர மறுத்த ஏ.வி.எம். : சவால் விட்ட நாகேஷ் : இறுதியில் வென்றது யார்?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகன் நாகேஷ் ஏ.வி.எம். நிறுவனத்திடம் சவால் விட்டு அடுத்த சில மாதங்களில் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nagesh

நடிகர் நாகேஷ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தான் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயங்கிய ஏ.வி.எம்.நிறுவனத்திடம் நடிகர் நாகேஷ் சவால் விட்டு, அடுத்த சில மாதங்களில் அந்த சவாலிலும் வெற்றி பெற்று காட்டியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ்எம்.ஜி.ஆர்சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய்சங்கர், முத்துராமன்ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல் எம்.ஜி.ஆர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பினை பெற்று காமெடியில் கலக்கிய நாகேஷ்எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நடிகர்கள் முக்கியமானவர். எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் இருந்து விலகும் வரை நாகேஷ்க்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்து தமிழகத்தின் முதல்வர் என்ற அரியனையில் அமர்ந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

காமெடி நடிகராக அறிமுகமாகி இருந்தாலும்சில படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ள நாகேஷ்நடிப்பில் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் ஒரே நாளில் 5 படங்களுக்கு மேல் நடித்து வந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் 1962-ம் ஆண்டு வெளியான ஏ.வி.எம் நிறுவனத்தின் வீரத்திருமகன் என்ற படத்தில் நடிக்க நாகேஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஒரு விபத்து காரணமாக அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

அதன்பிறகு, 1963-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த நானும் ஒரு பெண் என்ற படத்தில் நாகேஷ் நடித்திருந்தார். எஸ்.எஸ்.ரஜேந்திரன், விஜயகுமாரி, நாகேஷ் எம்.ஆர்.ராதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, சுதர்சன் இசையமைக்க, கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்ற போது நாகேஷ் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது சம்பளம் பற்றி பேசுவதற்காக ஏ.வி.எம். அலுவலகத்திற்கு வருமாறு நாகேஷ்க்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி அங்கு வந்த நாகேஷ், இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு ரூ10 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் ஏ.வி.எம்.சரவணன் அதற்கு மறுப்பு தெரிவித்து ரூ5 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த நிலையில், இறுதியாக ரூ 6 ஆயிரம் சம்பளம் கொடுக்க, ஏ.வி.எம்.சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்ட நாகேஷ், நான் சம்பத்தில் கராறாக இருப்பதாக நினைக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்போது நான் என்ன சம்பளம் கேட்கிறேனோ அதை கொடுக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஏ.வி.எம்.சரவணன் அப்படி ஒரு நிலைமை வந்தால் அதையும் நாங்கள் செய்ய தயார் என்று கூறியுள்ளார். அதன்படி 1964-ம் ஆண்டு வெளியான ஏ.வி.எம்.நிறுவனத்தின் சர்வர் சுந்தரம் படத்திற்கு நாகேஷ் கேட்ட சம்பளத்தை கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

actor nagesh Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment