இந்த மெலடி யாரும் எதிர்பாக்கல; தேவயானி மகளுடன் பாடல் பாடிய தாய் மாமா நகுல்: வைரல் வீடியோ!

நான் கிட்டார் எடுத்து வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன். நான் மாமாவுடன் இணைந்து பாடியே ஆகனும் என்று இனியா சொல்கிறார்.

நான் கிட்டார் எடுத்து வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன். நான் மாமாவுடன் இணைந்து பாடியே ஆகனும் என்று இனியா சொல்கிறார்.

author-image
WebDesk
New Update
Nakul iniya and

அக்கா தேவயானி மகளுடன் பாடல் பாடிய நடிகர் நகுல்

நடிகர் நகுல் தனது அக்கா தேவயானியின் மகள் இனியாவுடன் இணைந்து பாடல் பாடும் ஒரு ரியாலிட்டி ஷோ குறித்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. மும்பையில் பிறந்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு பிரஷாந்த் – அஜித் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தேவயானி, அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல்கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழக அரசின் சிறந்த படத்திறகான விருதை வென்றிருந்தது. விஜயுடன் நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ், அஜித்துடன் நீ வருவாய் என, விஜயகாந்துடன் வல்லரசு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தேவயானி நடித்திருக்கிறார்.

கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்த தேவயானி, அதன்பிறகு படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். 1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என படம் உட்பட தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment
Advertisements

இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.  இதனிடையே ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவில் தேவயானியின் மகள் இனியா மற்றும் தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் இணைந்து பாடல் பாடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் கிட்டார் எடுத்து வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன். நான் மாமாவுடன் இணைந்து பாடியே ஆகனும் என்று இனியா சொல்கிறார்.

அதன்பிறகு இருவரும் இணைந்து ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடலை பாடியுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நகுல், அடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது தனது அக்கா மகளுடன் அவர் இணைந்து பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: