தேசிய விருது பெற்ற மாற்றுதிறனாளி பாடகி ஒருவரின் 7 ஆண்டுகள் கனவை நடிகர் நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் அந்த பாடகி நெகிழ்ச்சியாக நெப்போலியனுடன் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாக, சீவலபெரிபாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளியான எட்டுப்பட்டி ராசா, உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்ட் ஹிட்டாக அமைந்தது. சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
தமிழக அரசியலில், தி.மு.க.சார்பில் போட்டியிட்டு எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகனின் சிகிச்சைக்காக தமிழகத்தில் ஒரு பெரிய மருத்துவமனையெ கட்டியுள்ளார். தற்போது அமெரிக்காவில் தொழிலதிபர் விவசாயி என பல தொழில்கள் செய்து வரும் நெப்போலியன், தனது மகன் தனுஷ்க்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.
மகனின் நிச்சயதார்த்ததிற்காக சென்னை வந்த நெப்போலியன், தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஜோதி, 7 ஆண்டுகளாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் முயற்சித்து வந்த நிலையில், அவரது கனவை நிறைவேற்றியுள்ளார் நெப்போலியன். இது குறித்து நெப்போலியனிடம் வீடியோ காலில் பேசிய அவர், உங்கள் குடும்பத்தினர் அமெரிக்காவில் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். உங்கள் அன்புக்கு நன்றி அங்கிள் என்று கூறியுள்ளார்.
மேலும் தனுஷ் அண்ணா எப்படி இருக்கிறார் என்று கேட்க நெப்போலியன் நன்றாக இருக்கிறார் என்று பதில் சொல்ல, நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். நீங்கள் நல்ல ஃபர்பாம் பண்ணீங்களா என்று கேட்க, நல்லா ஃபர்பாம் பண்ணேன் என்று கூறுகிறார். செப்டம்பர் வரை அமெரிக்காவில் தான் இருப்பேன் செப்டம்பர் வரை அமெரிக்காவில் தான் இருப்பேன். செப்டம்பர் 11-ந் தேதி கிளம்புகிறேன் என்று சொல்கிறார். அதற்கு நெப்போலியன், ஆகஸ்ட் மாதம் நான் யுஎஸ் வருகிறேன். அப்போது சந்திப்போம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“