தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் குறித்து நடிகர் நெப்போலியன் கண்ணீர்மல்க பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். இளம் வயதில் தனது முதல் படத்திலேயே வயதானவர் கெட்டப்பில் நடித்து அசத்திய நெப்போலியன் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகரில், சின்னத்தாயி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார்.
இதில் ரஜினிகாந்துடன் இவர் நடித்த எஜமான் படத்தில் கொடூர வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. வில்லனாக நடித்து வந்த நெப்போலியன் 1994-ம் ஆண்டு வெளியான சீவலபெரி பாண்டி என்ற படத்தின் மூலம் நாயகான அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எட்டுப்பட்டி ராசா, கிழக்கும் மேற்கும், கலகல்ப்பு, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் கமலுடன் விருமாண்டி, தசவதாரம், சரத்குமாருடன் தென்காசிப்பட்டினம், ஐயா, சீமராஜா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கடைசியாக தமிழில் அன்பறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அரசியலில் இருந்த நெப்போலியன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர்.
இதனிடையே தற்போது அமெரிக்காவில் குடும்பத்துட்ன் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியனுக்கு தனுஷ் குணால் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இதில் முதல் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வரும் சமீபத்தில் நடிகர் நெப்போலியன் தனது மகன் குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
எனது மகன் 4 வயதாக இருக்கும்போது அவனுக்கு இந்த மாதிரி தசை சிதைவு நோய் இருப்பதாகவும் 10 வயதுக்கு மேல் அவர் நடக்க மாட்டார் என்றும் கூறினார்கள். சொன்னபடியே தனுஷ் 10 வயதுக்கு மேல் நடக்கவில்லை. இதனால் எங்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்த நோய்க்கு இருந்து இல்லை பிசியோதெரப்பி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம்தான் சரி செய்ய முடியும் என்று சொன்னார்கள்.
அப்போது திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பாரம்பரியமாக ஒருவர் இந்த சிகிச்சை முறை செய்வதாக கேள்விப்பட்டு அவரை போய் பார்த்தோம். அவர் சிகிச்சை கொடுத்த நன்றாக இருந்தது. ஆனாலும் அங்கு வசதி போதவில்லை என்பதால் அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தோம். அப்போது நான் மத்திய அமைச்சராக இருந்ததால் எனது மகனுக்கு இருக்கும் பாதிப்பு பிளாஷ் நியூசாக பரவியது.

இதனால் பலரும் இந்த மருத்துவத்தை தேடி வர தொடங்கினார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பிசியோதெரபி மருத்துவரிடம் ஒரு மருத்துவமனை கட்டினால் என்ன என்று சொல்லி அடுத்த சில மாதங்களில் ஒரு மருத்துவமனை கட்டி அப்போது துணை முதல்வராக இருந்த திரு ஸ்டாலின் அவர்களை அழைத்து திறந்து வைத்தேன். இப்போது பல வெளிநாடுகளில் இருந்து இந்த மருத்துவனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
மகனின் இந்த பாதிப்பு குறித்து அவனுக்கு தெரியாமல் இருக்க அவனை அடிக்கடி அமெரிக்காவுக்கு கூட்டிச்சென்றுவிடுவேன். அப்போது ஒருநாள் என்னை அமெரிக்காவுக்கு கூட்டி சென்றுவிடுங்கள். நான் படிக்க வேண்டும். இங்கு இருந்தால் வீல்சேரில் இருப்பதால் என்னை ஒரு மாதிர பார்க்கிறார்கள். அங்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று என்று மகன் சொன்னான்.
இதை கேட்டு நானும் எனது மனைவியும் ஒரே இரவில் முடிவு செய்து அமெரிக்காவுக்கு சென்றுவிட்டோம். அதற்கு முன்பே அங்கு சாப்ட்வேர் கம்பெனி தொடங்கி கிரீன் கார்டு எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். இதனால் அங்கு குடியேற எளிமையாக இருந்தது. குடும்பம் அங்கு செனட்றுவிட்டாலும் நான் மத்திய அமைச்ராக இருந்ததால் உடனடியாக அங்கு செல்ல முடியாவில்லை. அவ்வப்போது பிரதமரிடம் மற்றும் கலைஞரிடம் அனுமதி கேட்டுவிட்டு சென்று வருவேன்.
ஒரு கட்டத்தில் நமக்கு அரசியல் வேண்டாம் குடும்த்தை பார்க்க வேண்டும் என்று 2014-ம் ஆண்டு அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகு பாஜகவில் சேர்ந்தேன். அப்போது நான் அமெரிக்கா சென்றபோது என் மகன்கள் என்னிடம் பேசவில்லை. என் மனைவியிடம் கேட்டபோது அரசியல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது மீண்டும் அரசியல் கட்சியில் சேர்ந்தது மகன்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார். அப்போது அவர்களை அழைத்து விசாரித்தபோது. ஏம்மா நாங்க இன்னும் தனியாதான இருக்கனுமா என்று என் மகன்கள் கேட்டனர்.
அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அன்னைக்கு முடிவு பண்ணிணேன். இனிமேல் அரசியல் வேண்டாம் என்று அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டேன் என்று நடிகர் நெப்போலியன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil