தனது மூத்த மகன் தனுஷ் திருமணத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும் அமெரிக்க தொழிலதிபருமான நெப்போலியன் அழைப்பிதழ் கொடுத்த பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். எட்டுப்பட்டி ராசா படத்தின் மூலம் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நெப்போலியன்
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். ஆனால் தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
அதேபோல் அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நெப்போலியன் அவ்வப்போது தனது தோட்டத்தில் இருந்து விவசாயம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தனது மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ் மற்றும் குணால் ஆகியோருடன் கலிபோர்னியாவில் குடியேறியுள்ள நெப்போலியன், அமெரிக்காவில் தொழிலதிபராக வலம் வருகிறார். அவரது மகன் குணால் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூத்த மகன் தனுஷ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று செட்டில் ஆனா நடிகர் நெப்போலியன் தனது மகனை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ள நிலையில், தற்போது தனது மகக் தனஷ்க்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அக்ஷையா என்ற பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "அன்புள்ள நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம்…!" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“