மகன் தனுஷ் பிறந்த நாள்; காதலோடு கேக் ஊட்டிய மருமகள்: நெப்போலியன் உருக்கமான பதிவு!

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நெப்போலியன்,  தனது மகன் குறித்த அவதூறு கருத்துக்கள் தொடர்பான காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வதந்திகள் தற்போது அடங்கியுள்ளது,

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நெப்போலியன்,  தனது மகன் குறித்த அவதூறு கருத்துக்கள் தொடர்பான காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வதந்திகள் தற்போது அடங்கியுள்ளது,

author-image
WebDesk
New Update
Dhanush andh Akish

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அரசியல் பிரபலமாகவும் இருந்த நடிகர் நெப்போலியன், தனது மகன் தனுஷின் 27-வது பிறந்த நாள் விழாவை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நெப்போலியன். அதன்பிறகு, ரஜினிகாந்துடன் எஜமான், மம்முட்டியுடன் எதிரும் புதிரும், என பல படங்களில் வில்லனாக நடித்த நெப்போலியன், பல வெற்றிப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான சீலபெரி பாண்டி உள்ளிட்ட சில படங்கள் இன்றும் பேசப்படக்கூடிய படங்களாக நிலைத்திருக்கிறது.

சினிமாவில் இருக்கும்போதே தி.மு.க.வில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்ட நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா அரசியல் இரண்டிலும் இருந்து விலகிய நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அவரது மூத்த மகன் தனுஷ்க்காக, அமெரிக்காவில் செட்டில் ஆனதாக நெப்போலியன் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இதனிடையே, தனது மகன் தனுஷ்க்கு, அக்ஷையா என்ற பெண்னை கடந்த ஆண்டு நெப்போலியன் திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், இவர்களை பற்றிய சர்ச்சை கருத்துக்கள் மற்றும் வதந்திகள்இணையத்தில் அதிகம் பரவத்தொடங்கியது. ஆனாலும் நெப்போலியன் குடும்பம் இதை கண்டுகொள்ளவில்லை.

Advertisment
Advertisements

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நெப்போலியன்,  தனது மகன் குறித்த அவதூறு கருத்துக்கள் தொடர்பான காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வதந்திகள் தற்போது அடங்கியுள்ளது, சமீபத்தில் பரிதாபங்கள் கோபி, சுதாகர், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் தனுஷை சந்தித்த பேசிய வீடியோக்களை வெளியிட்ட நெப்போலியன், தனது மருமகள் வீட்டுக்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த ஜூலை 27-ந் தேதி தனுஷின் 27-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளனர்.

தங்களது அமெரிக்க வீட்டில் நடைபெறற இந்த பிறந்த நாள் விழாவில் நெப்போலியன் குடும்பத்தினர் அவரது மருமகள் அக்ஷையாவின் குடும்பத்தினர்,  மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இது குறித்து நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அக்ஷையா கேக் வெட்டி தனது கணவர் தனுஷ்க்கு ஊட்டி விழுகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து பதிவிட்டுள்ள நெப்போலியன், "அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, உங்களது அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், தனுஷுடைய 27வது பிறந்தநாளை , அதாவது தனுஷுடைய Golden Birthday வை அக்‌ஷயாவுடனும், எங்கள் நேஷ்வில் குடும்ப நண்பர்களுடனும் சேர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாக July 27லி்ல் எங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம் நன்றி" என பதிவிட்டுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: