கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாக ஒரு வீடியோவில், தன் முகத்தை மார்ப்பிங் செய்து வெளியிட்டதாகவும், இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நடிகை ஓவியா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கங்காரு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஓவியா, 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான நாளை நமதே படத்தில் நடித்திருந்தார். 2010-ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படம் ஓவியாவுக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பிறகு மெரினா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த ஓவியா, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மதல் சீசனில் பங்கேற்று தனக்கென தனி ஆர்மி உருவாக்கிய ஓவியா, தனது தனிப்பட்ட கேரக்டருக்காக பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வரும் ஓவியா குறித்து சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. இதன் மூலம் சமூகவலைதளங்களில், ஓவியா குறித்த செய்திகள் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
ஆபாசமான இந்த வீடியோவில், ஓவியாவை போன்று தோளில் பச்சை குத்திய பெண் ஒருவரை காட்டுவததால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோ குறித்து ஓவியா இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இருப்பினும், அவர் ஆன்லைனில் எதிர்கொள்ளும் துன்புறுத்தலை நிவர்த்தி செய்ய இன்ஸ்டாகிராமில் தனக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/16/oviya-shapshot.jpg)
இந்நிலையில், அந்த ஆபாச வீடியோ குறித்து ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். தவறான வீடியோவை பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஓவியா உறுதியுடன் இருப்பதாகவும், ஆனால் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்த்தார் ஓவியா தவிர்த்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒரு ரசிகர் வீடியோ ஒன்று வந்திருக்கிறது மேடம் என்று சொல்ல, அதற்கு எஞ்சாய் என்று பதில் அளித்துள்ளார். அதேபோல், இன்னும் கொஞ்சம் லென்த்தா எடுத்திருக்கலாம் என்று சொல்ல, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“