உடல் முழுவதும் 750 ஊசி, இன்னும் ஒரு வருடம் தான்; என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது: பொன்னம்பலம் உருக்கம்!

எனக்கு கிட்னி செயல் இழந்தபோது டயாலிஸில் செய்து இன்னும் ஒரு வருடம் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு என்ன செய்வது நம்மை யார் காப்பாற்றுவார் என்று யோசனையாக இருந்தது.

எனக்கு கிட்னி செயல் இழந்தபோது டயாலிஸில் செய்து இன்னும் ஒரு வருடம் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு என்ன செய்வது நம்மை யார் காப்பாற்றுவார் என்று யோசனையாக இருந்தது.

author-image
WebDesk
New Update
Ponambalam

கிட்னி பிரச்னை காரணமாக சிகிச்சையில் இருந்து வரும் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் இன்றைக்கு நான் அனுபவிக்கும் இந்த நிலை என் எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர் பொன்னம்பலம். 1988-ம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் பல படங்களில் சண்டை கலைஞராக நடித்துள்ள பொன்னம்பலம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிளில பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு, ஸ்டண்ட் மட்டுமல்லாமல் ஸ்ரீமன் நடிப்பில் பட்டையை கிளப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக, உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம் கடுமையாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓரளவு நலமுடன் இருக்கிறார்.

இதனிடையே தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனக்கு உதவிய நடிகர்கள் குறித்து பொன்னம்பலம் ஒரு யூடியூப்சேனல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில் பேசிய அவர், நடிகர் சரத்குமார் தான் என்னை முதலில், ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து உதவினார். அதன்பிறகு, கே.எஸ்.ரவிக்குமார் அர்ஜூன் உள்ளிட்ட பலர் உதவி செய்தார்கள். நான் சிகிச்சையில் இருந்தபோது, தனுஷ் வீட்டில் பெரிய பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அதையும் மீறி அவர் எனக்கு உதவி செய்தார்.

Advertisment
Advertisements

எனக்கு கிட்னி செயல் இழந்தபோது டயாலிஸில் செய்து இன்னும் ஒரு வருடம் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு என்ன செய்வது நம்மை யார் காப்பாற்றுவார் என்று யோசனையாக இருந்தது. அப்போது தான் சிரஞ்சீவி சார் ஞாபகம் வந்தது. உடனடியாக அவரை தொடர்புகொண்டபோது, பெரிய உதவி செய்தார். இன்றுவரை அவர் எனக்கு கோடி கணக்கில் செலவு செய்துள்ளார். நடிகர் செய்த உதவிகள் எவ்வளவு என்று என்னால் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை போய்விடும்.

எனது எதிரிக்கும் வரக்கூடாது என்று நான் நினைப்பது இதுதான் டயாலஸிஸ். உடல் முழுவதும் 750 ஊசிக்கு மேல் போட்டாச்சு. 2 நாட்களுக்கு ஒருமுறை இந்த டயாலஸிஸ் செய்கிறேன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பெரிய கொடுமை இது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும், உலகத்திலேயே அதிகபட்ச தண்டனை இதுதான். 750 முறை நானே ஊசி போட்டுக்கொண்டேன். நன்றாக சாப்பிட்டு பழகியவன் கிட்னி போய்விட்டது என்றால் செத்து போய்விடலாம் என்று பொன்னம்பலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: