நான் ஹாஸ்பிடலில் இருந்த இந்த 3 வருடங்களில் பலரை பற்றி தெரிந்துகொண்டேன் என்று நடிகர் பொன்னம்பலம் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர் பொன்னம்பலம். 1988-ம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மேலும் பல படங்களில் சண்டை கலைஞராக நடித்துள்ள பொன்னம்பலம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிளில பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, ஸ்டண்ட் மட்டுமல்லாமல் ஸ்ரீமன் நடிப்பில் பட்டையை கிளப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைபாடு காரணமாக பொன்னம்பலம் கடுமையாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறார்.

இதனிடையே தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனக்கு உதவிய நடிகர்கள் குறித்து பொன்னம்பலம் ஒரு யூடியூப்சேனல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில் பேசிய அவர், விஜயகாந்த் ஆக்டீவாக இருந்திருந்தால் இந்த 3 வருடங்கள் நான் கஷ்டப்பட்டிருக்க மாட்டேன். மாதம் அல்ல 3 நாட்களில் எனக்கு தேவையான அனைத்தையும் செய்திருப்பார் என்று கூறியுள்ளார்.
அதற்கு தொகுப்பாளர் நீங்கள் ஹாஸ்பிடலில் இருக்கும்போது விஜயகராந்த் குடும்பத்தினரிடம் பேசியிருக்கலாமே என்று கேட்டபோது அவரே கஷ்டத்தில் இருக்கும்போது என் கஷ்டத்தை எபபடி சொல்வது சாமியே கஷ்டப்படுது இதுல என்னை காப்பாற்று என்று எப்படி நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் நான் சிகிச்சையில் இருந்த இந்த 3 வருடங்கள் நான் யாரெல்லாம் நம்பினேனோ அவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள்.
நான் அதிகமாக பாசம் வைத்த பலர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்க்காமல் பலர் எனக்கு உதவி செய்தார்கள். நடிகர் சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்கள். நடிகர் தனுஷ் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. நான் உடல்நிலை சரியில்லை என்றஉடனே போன் செய்து விசாரித்தார். அதோடுமட்டுமல்லாமல் எனது ஆப்ரேஷனுக்கான அனைத்து செலவையும் ஏற்றுக்கொண்டார் என்று கூறியுள்ளார். பொன்னம்பலத்தின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“