scorecardresearch

சீரியலில் களமிறங்கிய பவர்ஸடார் : வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Tamil Serial : காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது சன்டிவி சீரியலில் நடித்து வருகிறார்

சீரியலில் களமிறங்கிய பவர்ஸடார் : வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

கடந்த 2010-ம் ஆண்டு நீதான அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், அதற்கடுத்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இதில் 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா படத்தின் மூலம் ஹீரோக ஆனார். இந்த படத்தின இயக்குநர் தயாரிப்பாளர் என அனைத்து பணிகளையும் இவரே செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், சந்தனத்துடன் சேர்ந்து நடித்த படங்களில் வரும் காமெடி காட்சிகள் இன்றளவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சினிமா நடிகரான இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் டாக்டரான இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கும் சென்றிருக்கிறார்.

இந்நிலையில்,  தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் சீரியலிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சன் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ஜோதி என்ற புது தொடரில் தான் பவர் ஸ்டார் நடித்த வருவதாகவும், இந்த சீரியல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor power star sreenivasan committed in tamil serial

Best of Express