/indian-express-tamil/media/media_files/2024/12/04/CQdX45zuWsiDOxSSI3rq.jpg)
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2010-ம் ஆண்டு வெளியான உனக்காக ஒரு கவிதை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீனிவாசன். தொடர்ந்து நீதானா அவன், மண்டபம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2011ம் ஆண்டு வெளியான லத்திகா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படங்கள் இவருக்கு கை கொடுக்காத நிலையில், 2013-ம் ஆண்டு வெளியாக கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
சந்தானம் மற்றும் சேது ஆகியோருடன் நடித்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அதன்பிறகு, ஐ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் கேமியோ ரோலில் நடித்த இவர், கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பாட்டி சொல்லை தட்டாதே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள, பவர் ஸ்டார் சீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசனுக்கு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் அடிப்படையில், அக்கு பஞ்சர் மருத்துவர். அரசியல் கட்சிகளிலும் தொடர்பில் இருந்த சீனிவாசன் 2013-ல் மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2018-ம் ஆண்டு அவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.