இந்திய சினிமாவில் நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்டவர் பிரபுதேவா. 1986-ம் ஆண்டு வெளியான மௌனராகம் திரைப்படத்தில் டான்ராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து, பல படங்களில் டான்ராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 1994-ம் ஆண்டு வெளியாக இந்து படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். சரத்குமார் ரோஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர்ஹிட்டாக அமைந்தது.
அதே ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படம் பிரபுதேவாவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. நக்மா நாயகியாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற முகாப்லா முகாப்லா மற்றும் ஊர்வசி ஊர்வசி ஆகிய பாடல்கள் குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தது. இன்றைய ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல்களில் பிரபுதேவாவின் நடனம் ஒரு இன்ஸ்பிரேஷனாக உள்ளது.
இந்த பாடல்கள் வெற்றி பெற்றிருந்தாலும் முகாப்லா முகாப்லா பாடல் படப்பிடிப்பின்போது நடனமாடிய பிரபுதேவ அதினமாக வலியை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. சமீபததில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரபுதேவா, தனது இடது காலில் இறுக்கமாக கட்டப்பட்ட க்ரீப் பேண்டேஜுடன் முகாப்லா பாடல் எப்படி படமாக்கப்பட்டது என்று கூறியிருந்தார். பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது வலியைப் பற்றி சிந்திக்கவில்லை, வீட்டிற்குச் சென்ற பிறகுதான் அது எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
முகாப்லா பாடல்காட்சிக்கு முன் காதலன் படத்தில் ஒரு சண்டைக் காட்சி இருந்தது, அதை படமாக்கும் போது என் இடது காலில் தசைநார் கிழிந்தது. எனக்கு புரியவில்லை, தசைநார் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் நடக்கவும் முடியவில்லை. “என்னவளே” பாடலில், நான் நடக்கவே இல்லை. அதில் நான் ஒரு சிறிய காட்சிக்கு மட்டுமே நடந்தேன். “என்னவளே” படத்திற்குப் பிறகு, “முகப்லா” படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது. என்னால் இடது காலை அசைக்க முடியவில்லை, அது மிகவும் வேதனையாக இருந்தது. தசைநார் கிழிதல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடனம் ஆட வேண்டும் என்ற மனம் இருந்தது. அதனால் முழு முகாப்லா பாடலை வலது காலில் மட்டும் ஆடினேன். முழு எடையும் நான் வலது காலில் போட்டேன். இடது காலில் க்ரீப் பேண்டேஜ் கட்டினேன். நான் வெவ்வேறு செருப்பு வெவ்வேறு அளவுகளில் பயன்படுத்தினேன். ஒரு காலில், நான் 9 இன்ச், மற்றொரு காலில் 10 இன்ச் அளவுள்ள செருப்பு அணிந்தேன். முழுப் பாடலும் அப்படித்தான் ஆடினேன்” என கூறியுள்ளார்.
மேலும் அப்போது தான் இளமையாக இருந்ததால் அந்த வலியில் தான் நடனமாடியதாகவும், தனக்கு எந்த வலிக்கும் முன் நடனம் பெரிதாக தெரிந்தது. ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் வலியை உணர்ந்தேன். நடனமாடும் போது, எதுவும் முக்கியமில்லை. நான் கட்டையை மிகவும் இறுக்கமாக கட்டினேன், ஷூ மிகவும் இறுக்கமாக இருந்தது. வலியை விட, க்ரீப் பேண்டேஜ் எனக்கு கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
பிரபுதேவாரெமோ டிசோசாவின் 2019 திரைப்படமான ஸ்ட்ரீட் டான்சர் 3D இல் பாடலை மீண்டும் உருவாக்கினார். அவர் 1994 பதிப்பில் இருந்ததைப் போலவே பாடலில் சிரமமின்றி இருந்தார். அசல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/