நடிகர் பிரதீப் கே.விஜயன் மரணம் : குளியல் அறையில் பிணமாக மீட்பு; காரணம் இதுதானா?

நடிகர் பிரதீப் கே.விஜயன் மரணம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் பிரதீப் கே.விஜயன் மரணம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Pradeep K Vijayan

பிரதீப் கே.விஜயன்

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன் தனது குளியல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அசோக் செல்வன் நடித்த தெகிடி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியவர் பிரதீப் கே.விஜயன். மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், சென்னை பாலவாக்கம் பகுதியில், வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த இரு தினங்களாக இவரது நண்பர்கள் இவரை போனில் அழைத்தபோது அவர் போன் அட்டன் செய்யாமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அவரது நண்பர்கள் சிலர் அவரை தேடி வீட்டுக்கு வந்தபோது, அவரது வீடு உள் பக்கமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவரது நண்பர்களுடன், பிரதீப் வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசார் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு குளியல் அறையில் தலையில் பலத்த காயத்துடன், பிரதீப் இறந்து கிடந்துள்ளார். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசார் பிரதீப் கே விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரதீப்க்கு ஏற்கனவே தலைசுற்றல், மூச்சுத்திணல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதீப் கே விஜயன், மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: