/indian-express-tamil/media/media_files/2025/07/31/sneha-and-prasanna-2025-07-31-22-29-41.jpg)
டிவி நிகழ்ச்சி ஒன்றில் சினேகா பிரசன்னா இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில், அதில் நடிகர் பிரசன்னா தனக்கு பிடித்த நடிகை யார் என்பதை கூறியுள்ளார். ஆனால் அது கண்டிப்பாக சினேகா இல்லை.
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் சினேகா – பிரசன்னா ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு. ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, அதன்பிறகு, தொடர்ந்து ஃபீல்குட் படங்களில் நடித்து வெற்றி கண்டவர். அதேபோல், 2000-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் அறிமுகமான சினேகா அடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
தனது 4-வது தமிழ் படமான பம்மல் கே சம்பந்தம் படத்திலேயே கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற சினேகா, சூர்யாவுடன், உன்னை நினைத்து, விஜயுடன் வசிகரா, அஜித்துடன் ஜனா, விக்ரமுடன் கிங், தனுஷூடன் புதுப்பேட்டை, சிம்புவுடன் சிலம்பாட்டம், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பவானி உள்ளிட்ட சில படங்களில் தனி ஹீரோயினாகவும் நடித்து வெற்றி பெற்ற சினேகா, கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.
2009-ம் ஆண்டு வெளியான இந்தியன் – அமெரிக்கன் படமான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சினேகா பிரசன்னா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இருவரும் பிஸியான பிரபலங்களாக வலம் வருகின்றனர். சமீபத்தில் வெளியான அஜித்தின் குட், பேட், அக்லி திரைப்படத்தில் பிரசன்னா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் சினேகாவுடன் கலந்துகொண்ட பிரசன்னா, தனக்கு பிடித்த நடிகை யார் என்பதை பற்றி கூறியுள்ளார் அதில், சினேகா, ஒருநாள் எனக்கு பிடித்த நடிகை யார் என்று எழுதிக்கொடு என்று சொன்னார். நானும் சினேகா என்று எழுதி கொடுத்தேன். ஆனால் அவர் வேறு பெயர் சொன்னார். அது யார்னு கேளுங்க என்று சொல்ல, அதை கேட்ட பிரசன்னா, இது எஸ்கேப்பிசம், எதை சொன்னாலும் உண்மையாக சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்.
அதன்பிறகு நடிகை சங்கீதா உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டுவிட்டு உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்ட பிரசன்னா சினேகா என்று சொல்ல, பொய் சொல்லாதீங்க உண்மையை சொல்லுங்க என்று சொல்கின்றனர். அப்போது எப்போமே எனக்கு என் தானை தலைவி தமன்னாதான் பிடிக்கும் என்று சொல்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.