New Update
/
தமிழ் சினிமாவில் பேச்சிலராக சுற்றி வந்த நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இது காதல் திருமணம் என்றும் தகவல் வெளியான நிலையில், தற்போது அவரின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், காமெடி நடிகர், இசையமைப்பாளர் பாடகர் என பன்முக திறமை கொண்ட பிரேம்ஜி, சிம்பு இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜி தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ள பிரேம்ஜி, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தார். திரையுவகில் புகழ்பெற்றிருந்த அவர், ‘’என்ன கொடுமை சார் இது’’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தார்.
இதன் மூலம் பிரேம்ஜிக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது 45 வயதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இது காதல் திருமணம் என்றும் தகவல் வெளியானது. அதன்படி தற்போது அவரின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி வரும் ஜுன் 9-ந் தேதி திருத்தணி முருகன் கோவிலில், பிரேம்ஜி – இந்து திருமணம் நடைபெற உள்ளது. இதன் மூலம் இதுவரை பேச்சிலராக சுற்றிவந்த பிரேம்ஜி இனி ஃபேமிலிமேனாக மாறப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பலரும் பிரேம்ஜிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பத்திரிக்கை தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.