/indian-express-tamil/media/media_files/2025/07/29/pugha-2025-07-29-21-22-40.jpg)
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான, புகழ், ஆடி ஆடிமாத திருவிழாவில் தீ மிதித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், திடீரென்று தீ மிதித்தது ஏன் என்பது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் டிவியின் அது, இது எது, கலக்கப்போவது யாரு, உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான புகழ், தற்போது திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். குக் வித் கோமாளி தொடங்கியதில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வரும் புகழ், தற்போது 6ஆவது சீசனில் ஷபானாவுக்கு கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
அதேபோல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சந்தானம் நடித்த சபாபதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, யானை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த அவர், மிஸ்டர் ஷூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டீவர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் புகழ், விலங்கியல் பூங்காவில் பாதுகாவலராக நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் தனக்கு பெரிய பிரேக்காக இருக்கும் என்று புகழ் நம்புகிறார். இதனிடையே, நடிகர் புகழ், கடலூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பொங்கல் வைத்து தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில், ஆண்டவா எல்லாரும் எப்பவும் மனநிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும் என்று குறிப்பிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரை சேர்ந்த புகழ், கடந்த 2022 ஆம் ஆண்டு பென்சி ரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு, ரிதன்யா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.