அவங்க ஆதிக்கம் பண்ற டைப்; நீ புருஷனா? பொண்டாட்டியா? கலா மாஸ்டர் கணவரிடம் கேட்ட ராதாரவி!

கலா மாஸ்டர், 40 வருடங்களை கடந்த நிலையில், அவருக்கான பாராட்டு விழா குறித்த வீடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

கலா மாஸ்டர், 40 வருடங்களை கடந்த நிலையில், அவருக்கான பாராட்டு விழா குறித்த வீடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Radha Ravi

தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் தனது நடனத்தின் மூலம் முத்திரை பதித்த கலா மாஸ்டர், 40 வருடங்களை கடந்த நிலையில், அவருக்கான பாராட்டு விழா குறித்த வீடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் ராதாரவி பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

சினியுலகம் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், கலா மாஸ்டர் மற்றும் அவரது சகோதரி சுஜி மாஸ்டர் இருவரும், சினிமா துறையில் தங்களது கடின உழைப்பாலும், திறமையாலும் சாதித்தவர்கள். சினிமாவுக்கு வந்த புதிதில், இருவரும் இணைந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவார்கள். அப்போது விஜயகாந்த் டேய் யார்ரா இவங்க என்று கேட்பான். இவர்கள் ஒன் டூ சொல்லி எங்களை ஆட வைப்பார்கள். எனக்கும் டான்ஸ்க்கும் ரொம்ப தூரம். அப்போதுதான், நடனத்துறையில் இருவருக்கும் இருந்த திறமை தெரிந்தது,

நடிகர் சங்கத்தில் ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது, கலா மாஸ்டர் மற்றும் சுஜி மாஸ்டரை ஒரு சாலையில் பார்த்தேன். உடனே என் காரை நிறுத்தி, அவர்களை அழைத்தேன். அதன் பிறகு, நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்ததால், என் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று, "இதுதான் உங்கள் இடம், இங்கே நீங்கள் நடனப் பள்ளி ஆரம்பிக்கலாம்" என்று கூறி, நடிகர் சங்க மேடையைக் காட்டினேன். நான் இருந்த தலைவர் பதவியை பயன்படுத்தி ஒரு சட்டத்தை ஏற்படுத்தி, கலா மாஸ்டருக்கு நடனப் பள்ளி ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தேன்.

5 மாணவர்களுடன் தொடங்கிய கலா மாஸ்டரின் நடனப் பள்ளி, பிறகு 500 மாணவர்களாக அதிகரித்தது. இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுபோன்று, கலா மாஸ்டர் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் செல்ல அவருக்கு உதவினேன். ஒரு பேட்டியில், கலா மாஸ்டர் இதனை பெருமையுடன் சொன்னார். அவருக்குத் தேவையான பாஸ்போர்ட் பெறுவதற்கு கூட உதவியது நான் தான். வெளிநாட்டுப் பயணங்களை முதன்முதலில் ஜெய்சங்கர் சாரிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். அதைதான், நான் கலா மாஸ்டருக்கு உதவ பயன்படுத்தினேன்.

Advertisment
Advertisements

கலா மாஸ்டரின் வெற்றிக்காக அவர் எவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்திருப்பார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பெரிய பெரிய ஹீரோக்களை எல்லாம் ஆட்டிப்படைத்தவர் கலா மாஸ்டர். கலா மாஸ்டரின் நிகழ்ச்சிகள் மற்றும் அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பேசும்போது மிகவும் கண்டிப்புடன் பேசுவார். ஒருமுறை நான் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவரது கணவர் அங்கிருந்தார். அப்போது, நான் அவரிடம், "நீங்க அவங்களுக்கு புருஷனா இருக்கீங்களா? இல்லை பொண்டாட்டியா இருக்கீங்கா என்று கேட்டேன்.

ஏனென்றால் கலா மாஸ்டர் ஆதிக்கம் பண்ணுகிற டைப், இங்கு எல்லோரையும் எப்படி ஆட்டி படைக்கிறார் என்பது தெரியும். கலா மாஸ்டரின் வெற்றிக்கு அவர் மிகப்பெரிய துணையாக இருக்கிறார். அவரது கடின உழைப்பில் பாதி கலா மாஸ்டருடையது என்றால், மீதி பாதி அவருடையது என்று சொல்லலாம். அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர் என்று ராதாரவி கூறியுள்ளார். 

Tamil Cinema News Radharavi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: