/indian-express-tamil/media/media_files/2025/09/11/ragava-la-2025-09-11-19-10-44.jpg)
சினிமாவில் சம்பாதித்து தான் முதன் முதலில் கட்டிய வீட்டை இலவச பள்ளியாக மாற்ற உள்ளதாகவும், அதில் படித்து தற்போது ஆசிரியராக இருக்கும் ஒருவரை இந்த பள்ளியின் முதல் ஆசிரியராக நியமிப்பதாகவும் நடிகரு ராகவா லாரண்ஸ் ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், இன்று உங்கள் அனைவருக்கும் நான் வளர்த்த குழந்தைகளுடன் இணைந்து ஒரு விஷயம் சொல்லப்போகிறேன் என்று தொடங்கும் லாரண்ஸ், என் புதிய திரைப்படம் காஞ்சனா 4 ஷூட்டிங் தொடங்க போகிறோம். ஒவ்வொரு படத்தின் அட்வான்ஸ் தொகையும் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக எடுத்து வைத்துவிடுவேன். அப்படித்தான் இந்த படத்தின் அட்வான்ஸ் தொகையை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்தப்போகிறேன்.
இந்தப் படத்தின் அட்வான்ஸ் தொகையுடன், என்னுடைய முதல் வீட்டைக் குழந்தைகளுக்கான இலவசப் பள்ளியாக மாற்றப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் வீட்டில் வளர்ந்த ஒருவரே இந்தப் பள்ளியின் முதல் ஆசிரியராக இருப்பார் என்பது எனக்கு இன்னும் பெருமை அளிக்கிறது. இந்த அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். என் திரைப்படங்களுக்கு வரும் அட்வான்ஸ் தொகையை வைத்து, எனக்கு நெருக்கமான சமூகப் பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சனா 4 திரைப்படத்தின் அட்வான்ஸை, என் முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றுவதற்குப் பயன்படுத்த உள்ளேன். இந்த வீடு எனக்கு மிகவும் சிறப்பானது. குருப் டான்சராக இருந்தபோது சிறுசிறு தொகையை அம்மாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தில் வாங்கியது தான் இந்த இடம். நடன இயக்குநராக நான் சம்பாதித்த முதல் பணத்தில் கட்டியது இந்த வீடுதான். பிறகு, இதை ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லமாக மாற்றிவிட்டு, நானும் என் குடும்பத்தினரும் வாடகை வீட்டில் குடியேறினோம். இப்போது என் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள்.
Kanchana 4 is rolling and halfway through — I’m Happy to Announce That I’m Transforming My First Home into a Free School for Children with my Kanchana 4 Advance - with the First Teacher Being a Child Who Grew Up in my home 🙏
— Raghava Lawrence (@offl_Lawrence) September 11, 2025
I’m so delighted to share some exciting news with… pic.twitter.com/qvcCYQruGE
இதன் காரணமாக இந்த வீட்டைக் குழந்தைகளுக்காக மீண்டும் அர்ப்பணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இதைவிட எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரும் விஷயம் என்னவென்றால், என் வீட்டில் வளர்ந்து, படித்து, இப்போது வளர்ந்திருக்கும் ஒரு குழந்தையே இந்தப் பள்ளியின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்க இருப்பதுதான். அவரது பெயர் வேளாங்கண்ணி. இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எப்போதும்போல, உங்களின் ஆதரவு தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.