Advertisment

காஞ்சனா அடுத்த பாகம் எப்போது? கோவையில் லாரன்ஸ் பேட்டி

மூன்று வருடங்கள் கழித்து ருத்ரன் படம் மூலம் ரசிகர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து நல்ல கருத்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
raghava

ராகவா லாரனஸ்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் நடிகராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கதிரேசன் ஆகியோர் கோவைக்கு வருகை புரிந்தனர்.

Advertisment

அப்போது கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி திரையங்கில் புதுப்பிக்கப்பட்ட ஒரு திரையை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கேஜி திரையரங்கின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், கூறுகையில்,

மூன்று வருடங்கள் கழித்து ருத்ரன் படம் மூலம் ரசிகர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து நல்ல கருத்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கோவிட் முன்பு இருந்த மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது, சிறிய படமாக(Low Budget) இருந்தாலும் நல்ல கதை இருந்தால் அனைவரும் அதனை வரவேற்பார்கள்

இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன். ஜொர்தாலயா பாடல், நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் பொழுது அதனை கேட்டேன் அப்போது அந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த பாடலுக்கு நான் ஆட வேண்டும் என விரும்பி இதனை இயக்குனரிடம் தெரிவித்தேன் தற்போது உள்ள இளைஞர்கள் அவர்களது பாடல்களை youtube போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களை திறமைகளை வெளிகொணர்ந்து வருகிறார்கள்.

publive-image

ஒரு சிறிய இடைவெளி விட்டு காஞ்சனாவின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம். சந்திரமுகி இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் இயக்குனர் பி.வாசு பார்த்துக் கொள்கிறார் நானு முழுக்க முழுக்க அவரிடம் கொடுத்து விட்டேன். பலருக்கும் உதவி செய்வதை நான் மட்டும் தான் செய்கிறேன் என கூற முடியாது பலரும் அதனை செய்கிறார்கள், நான் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களின் சார்பிலும் தான் உதவி செய்து வருகிறேன். ருத்ரனை யாராலும் அழிக்க முடியாது,  அவர் வந்து விட்டார் ருத்ரதாண்டவத்தை ஆடி வருகிறார் இதற்கு சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என கூறினார்.

இன்ன நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ருத்ரன் படத்தின் இயக்குனர் கதிரேசன், இந்த படத்திற்கு அனைவரும் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இதில் வாழ்க்கையை குடும்பத்தினருடன் வாழ வேண்டும் முக்கியமாக தந்தை தாயுடன் வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை எடுத்து கூறியுள்ளோம். இந்த படத்தை பார்த்து விட்டு பெற்றோர்களை பிரிந்து உள்ள பலரும் தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment