தமிழ் சினிமாவில், முதலில் நாயகனாக நடித்து பின்னாளில் முன்னணி வில்லன் நடிகராக மாறிய நடிகர் ரகுவரன், ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக, தனது கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு கிழிக்க முயற்சி செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1982-ம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரகுவரன். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிகனாக நடித்த இவர், 1986-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் மிஸ்டர் பரத் என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு வில்லன், குணச்சித்திரம் என பல படங்களில் நடித்துள்ள ரகுவரன் வில்லான முத்திரை பதித்துள்ளார்.
குறிப்பாக 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில், ரஜினிகாந்தை விடவும், ஒரு படி அதிகமாக பேசப்பட்ட கேரக்டர் மார்க் ஆண்டனி. தனது சிறப்பான நடிப்பின் மூலம்,மார்க் ஆண்டனி கேரக்டருக்கு உயிர் கொடுத்த ரகுவரன், ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் ரகுவரன் வில்லனாக நடித்து பிரபலமான படங்களில் ஒன்று புரியாத புதிர். 1990-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் சந்தேக புத்தி கொண்ட ஒரு கணவராக நடித்திருந்த ரகுவரன், ஐ நோ என்று சொல்லும் ஒரு காட்சி இன்றுவரை பிரபலமாக பேசப்படும் ஒரு காட்சியாக உள்ளது. இந்த காட்சிக்கு 10 பக்கம் வசனம் எழுதி வைத்திருந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அந்த காட்சியை படமாக்க தயாராகியுள்ளார்.
அன்றைய தினம் ரகுவரன் லேட்டாக வந்ததால், கோபமான கே.எஸ்.ரவிக்குமார், டைலாக் பேப்பரை கிழித்துவிட்டு, இந்த காட்சியில் ஐ நோ என்று சொன்னால் போதும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரகுவரன், அதை அப்படியோ காட்சியாக கொண்டு வந்துள்ளார். அதேபோல், இந்த படத்தில் ரகுவரன் பிணமாக நடிக்கும் ஒரு காட்சிக்கு அவரது கழுத்தில், ரத்தம் இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வியர்த்ததால், ரத்தம் போன் மேக்கப் நிற்கவில்லை. இதனால், ஒரு கத்தியில் ரத்தத்திற்கு பயன்படுத்தும் திரவத்தை வைத்து கழுத்தில் கோடு போட்டுள்ளார்.
நிஜ கத்தியை கழுதில் வைத்துக்கொண்டிருந்ததால், அதை பார்த்து அதிர்ச்சியாக கே.எஸ்.ரவிக்குமார், உடனடியாக அந்த கத்தியை பிடுங்கி போட்டுள்ளார். பிணமா நடிக்க சொன்ன, ஒரிஜினலா கழுத்தில் ரத்தம் வரமாதிரி பண்ணிடுவ போல என்று சொல்லி திட்டியுள்ளார். இந்த தகவலை கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“