கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 38 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான தக் லைப் படத்தில் நடிகை குஷ்புவின் மகள் உதவி இயக்குனராக பணியாற்றிய தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஒரு நடிகரின் மகளும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்த படம் தக் லைப். கமல்ஹாசனுடன் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 5-ந் தேதி வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், முதல் நாள் வசூலில், கமல்ஹாசனின் முந்தைய படமான இந்தியன் 2, மற்றும் மணிரத்னத்தின் முந்தைய படமான பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வசூலை முந்த தக் லைப் தவறிவிட்டது.
இந்நிலையில், இந்த படததில் நடிகை குஷ்பு – சுந்தர்.சி தம்பதியின் மகள் அனந்திகா உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது குறித்து அனந்திகா பெயர் இருக்கும் ஸ்னாப்ஷாட் ஒன்றை பகிர்ந்த நடிகை குஷ்பு, மணிரத்னத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியமாக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அந்த வரிசையில் தற்போது ஒரு நடிகரின் மகளும் இடம்பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் சங்கமம் உள்ளிடட பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரஹ்மானின் மகள், அலீஷாவும் தக் லைப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாந்தி... இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு எனது நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அலீஷாவின் சித்தப்பா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பெஸ்ட் ஆப் லக் டியர் காட் பிளஸ் யூ என்று பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கத்தீஜா, ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.