Advertisment

கருகரு முடியுடன் ஸ்டைலிஷ் ரஜினி... மாடர்ன் உடையில் லதா... வைரல் போட்டோஸ்!

Tamil CInema Update : தலைவர் செம்ம லைலடைலிஷ் என்றும்,பொதுவாக எப்போதும் சேலையில் இருக்கும் லதா ரஜினிகாந்த் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இருக்கிறார்

author-image
WebDesk
Dec 17, 2021 16:40 IST
New Update
கருகரு முடியுடன் ஸ்டைலிஷ் ரஜினி... மாடர்ன் உடையில் லதா... வைரல் போட்டோஸ்!

Actor Rajinikanth And Latha rajinikanth Photos Viral : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கடந்த 1975- ஆண்டு வெளியான அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், சோலோ ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்டன் வலம் வருகிறார். தற்போது 70 வயதை கடந்துள்ள ரஜினிகாந்த, இன்றும் தனது படங்களில் மாஸாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

publive-image

தன்னுடைய முயற்சியின் காரணமாக பல வெற்றிப்படற்களை கொடுத்த ரஜினிகாந்த் கடந்த 1981-ம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். லதா தன்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் தான் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்ததாக ரஜினிகாந்த் பலமுறை கூறியுள்ளார். லதாவை ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

publive-image

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளக்பஸ்டர் படம் தில்லு முல்லு. இந்த படத்தின் ஷூட்டிங்கில், லதாவின் பணியாற்றிய லதாவின் தந்தை, பெங்களூரில், மல்லெஸ்வரம் பகுதியில் வசித்துவந்தார். அப்போது சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்த லதா ரஜினிகாந்தை பேட்டி எடுக்க செல்லும்போது முதன் முதலாக சந்தித்துள்ளார்.

publive-image

முதல்பார்வையிலேயே விழுந்த ரஜினிகாந்த தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்டுள்ளார். இந்த தைரியமா பேச்சு கடைசியில் திருமணத்தில் முடிந்தது. அதன்பிறகு இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்ததர்யா என இரண்டு மகள்கள் பிறந்தனர்.

publive-image

இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், தலைவர் செம்ம லைலடைலிஷ் என்றும்,பொதுவாக எப்போதும் சேலையில் இருக்கும் லதா ரஜினிகாந்த் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் ஒரு பெண் போஸ்கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rajinikanth #Latha Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment