முகேஷ் அம்பானி இல்ல திருமணம்: நடனமாடி அசத்திய ரஜினிகாந்த்; வைரல் வீடியோ!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Ambania

நடிகர் ரஜினிகாந்த்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் திருமணம் கடந்த 6 மாதங்களாக கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களான ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இருவரும் நடனமாடிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் திருமண ஏற்பாடுகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இவர்களின் திருமணம் கோலாகலமாக இன்று நடைபெற்ற நிலையில், இந்திய சினிமா, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட துறைகளின் முக்கிய நபர்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான்சீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

அதேபோல் நடிகா ரஜினிகாந்த், கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, இயக்குனர் அட்லி, உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக உலக அரங்கில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு முகேஷ் மற்றும் நீதா ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

Advertisment
Advertisements

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் வந்திருந்தார். முதலில் குடும்பத்தினருடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த் அடுத்து பத்திரிக்கையாளர்களுக்காக தனியாக நின்று போஸ் கொடுத்துள்ளார். தொடர்ந்து அங்கு கலைநிகழ்ந்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பாலிவுட் நடிகர் அணில் கபூருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நடனமாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: