scorecardresearch

கிருஷ்ணகிரி அருகே ரஜினிகாந்த் பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை: நேரில் வருவாரா ரஜினி?

தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்

Rajinikanth
ரஜினிகாந்த் பெற்றோர் சிலை

முன்னண நடிகரான ரஜினிகாநத்த தனது பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் தனது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவிடம் அமைத்து சுற்றுவட்டார மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக அவ்வப்போது முன்னுரிமை அளித்து வரும் இவர் தற்போது தனது பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் தனது பெற்றோருக்கு நினைவிடம் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றித்திற்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள் வாழ்ந்த இடம். ரஜினியின் பெற்றோரும் இந்த கிராமத்தில் தான் வாழ்ந்துள்ளனர். தற்போது இந்த கிராமத்தில் ரஜினியின் உறவினர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் வீட்டு விஷேஷங்களில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராமத்தில் சுமார் 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தனது பெற்றோர் ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைத்து நினைவிடம் அமைக்க அப்போதே தனது அண்ணன் சத்தியநாராயணராவ் மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அதன்பிறகு இந்த நினைவிடத்திற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தாலும், ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் இடத்தை பராமரித்து வந்தார். அதேசமயம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பொங்கல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த இடத்தில் இருந்து தொடங்கி நடத்தி வந்தனர். இதனிடையே தற்போது இந்த இடத்தில் ரஜினியின் பெற்றோருக்கு சிலை அமைக்கப்பட்டுள்து.

ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் கால்நடைகள் தண்ணீர் குடிக்க தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வீடியோ மூலம் நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியப்படுத்துவதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் ரஜினிகாந்த் தற்போது இங்கு வர முடியாத சூழல் உள்ளதாவும், விரைவில் அவர் இங்கு வருவார் என்றும் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor rajinikanth erected statue for his parants in his native village