தமிழ் சினிமாவில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி பின்னாளில் வில்லத்தனததில் கலக்கிய நடிகை வடிவுக்கரசி, ரஜினிக்கு வில்லியாக நடித்தபோது தனது ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1978-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவுக்காரசி. அதன்பிறகு கன்னிப்பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், ஒரு கட்டத்தில் வில்லியாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். சிவாஜி கணேசன் தொடங்கி, ரஜினிகாந்த் வரை பல நடிகர்களின் படங்களில் வில்லியாக கலக்கியவர் தான் வடிவுக்கரசி.
தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர், கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் நடிகர் ரஜினிகாநதின் பாட்டியாக வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில், சௌந்தர்யா, ரவிச்சந்திரன், ரகுவரன், விசு, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் முடிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் சென்றுள்ளார் நடிகை வடிவுக்கரசி.
தனது அம்மாவுடன் மேற்கொண்ட இந்த பயணத்தின்போது, ரயில் கிளம்புவதற்கு முன்பு, டி.டி.ஆர் வந்து கொஞ்சம் வெளியில் வாங்க என்று கூறியுள்ளார். வடிவுக்காரசியும் இது நம்ம சீட் இல்லை போல என்று நினைத்து அவரிடம் கேட்க, வெளியில் ஒருவர் ரயில் முன்பு நின்று போராட்டம் செய்கிறார். நீங்கள் வந்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்று சொல்ல, நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் எந்த தப்பும் பண்ணலயே என்று வடிக்கரசி கூறியுள்ளார்.
இதன்பிறகு அந்த டி.டி.ஆர் நீங்க முதலில் வெளியில் வாங்க என்று சொல்லிக்கொண்டு அவரை அழைத்து வந்துள்ளார். அப்போது ஒரு ரஜனி ரசிகர், என் தலைவனையே அநாதை பயலே என்று சொல்வீயா என்று கேட்க, அப்போது தான் வடிவுக்காரசிக்கு புரிந்துள்ளது. சினிமாவில் வசனம் சொன்னார்கள் நான் அதை பேசினேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவங்க சொன்னா, நீ பேசுவியா மன்னிப்பு கேள் என்று கூறியுள்ளனர். என்னப்பா ரகுவரன் அவ்வளவு பேசி அவரை அடிக்கிறார் அதற்கெல்லாம் ஒன்றுமே சொல்லலையே என்று கேட்க, அவர் தான் பதிலுக்கு அடி வாங்குகிறாரே நீ அடி வாங்குரியா ஒழுங்கா மன்னிப்பு கேள் என்று கூறியுள்ளனர்.
இதன்பிறகு வடிவுக்கரசி மன்னிப்பு கேட்க, அத்துடன் இங்கிருந்தவர்கள் கிளம்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“