கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth Got Covid Vaccination : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், நாட்டில் முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வைத்துகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது ரஜினியின் இளையமகள் சௌவுந்தயா ரஜினிகாந்த உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor rajinikanth got covid vaccination today

Next Story
Vijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com