மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அப்படக்குழுவினரை தனது இல்லத்தில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான இநத படம், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.
இத்திரைப்பட குழுவினர், முதலில் குணா படத்தின் நாயகன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் எல்லா காலத்திலும் மலையாளத்தில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர்கள், நன்றி சூப்பர் ஸ்டார் என்று எழுதியுள்ளனர். படத்தில், நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு கிளிக்கிற்கு போஸ் கொடுக்கும்போது அனைவரும் புன்னகைப்பதைக் காணலாம்.
மலையாள சர்வைவல் த்ரில்லரான 'மஞ்ஜூமல் பாய்ஸ்' படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பதை அமைக்கப்பட்ட'மஞ்ஜூமல் பாய்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“