முத்து படத்தில் முதல் சாய்ஸ் மீனா அல்ல: ரஜினியே அழைத்தும் முடியாதுன்னு சொன்ன டி.வி பிரபலம் இவர்தான்!

மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'தென்மாவின் கொம்பேத்' படத்தை தமிழில் முத்து என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் ரீமெக் செய்யப்பட்டது.

மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'தென்மாவின் கொம்பேத்' படத்தை தமிழில் முத்து என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் ரீமெக் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Rajinikanth Meena Muthu

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் ஒருமுறையாவது ரஜினிகாந்த் படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவரே விரும்பி தன் படத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தும், அந்த அழைப்பை தயக்கத்துடன் நிராகரித்துள்ளார் ஒரு டிவி பிரபலம். அவர் யார் தெரியுமா?

Advertisment

1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன், நடிப்பில் உச்சம் தொட்டார். தற்போது 70 வயதை கடந்துள்ள அவர், இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

தனது ஆரம்ப காலத்தில், பல குழந்தை நட்சத்திரங்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார், அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயே கேட்ட குரல் உள்ளிட்ட படங்களில் நடிகை மீனாவுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த் பின்னாளில் அவருடனே ஜோடியாக நடித்திருந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்து முத்து படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார், இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான மோதல், காதல், ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதே சமயம் இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க மீனா தேர்வு செய்யப்படவில்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம் ‘தென்மாவின் கொம்பேத்’. மோகன்லால், நெடுமுடி வேணு, ஷோபனா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ரீமெக் செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

மோகன்லால் கேரக்டரில் கேரக்டரில் ரஜினிகாந்தும், நெடுமுடி வேணு கேரக்டரில், சரத்பாபுவும் நடித்திருந்தனர். மலையாளத்தில் இல்லாத அளவுக்கு தமிழில் பல மாற்றங்கள் செய்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில், நடிகர் ரஜினிகாந்த் சின்னத்திரை பிரபலமாக அப்போது முன்னணியில் வலம் வந்த பெப்சி உமாவிடம் கேட்டுள்ளார். ஆனால் படத்தில் நடிக்க விருப்பம் இல்லாத பெப்சி உமா ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பை பெரும் தயக்கத்துடன் நிராகரித்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் பெற்றவர் என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பவர் பெப்சி உமா. பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்தது. சேலை தவிர மற்ற எந்த உடையும் அணியாதவர் என்ற அடையாளத்துடன் இருந்த பெப்சி உமாவை தேடி திரைப்பட வாய்ப்புகள் குவிந்தத, ஆனால் அவர் அந்தனை வாய்ப்புகளையும் நிராகரித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் முத்து பட வாய்ப்பு மட்டும் இல்லாமல், ஷாருக்கானுடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்பிபினையும் பெப்சி உமா மறுத்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள பெப்சி உமா தற்போது சின்னத்திரையில் இல்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: