Advertisment

மீண்டும் இணைந்த லெஜண்ட்ஸ் : இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ வெளியிடும் ரஜினிகாந்த்

இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
rajinikanth Kamal Haasa

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோவை நாளை மாலை 5.30 மணிக்கு தமிழில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சமூக விரோதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை (நவம்பர் 3) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த க்ளிம்ஸ் வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி வெளியிடுவார்கள் என்று அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ள இந்தியன் 2 படத்தின் இந்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த க்ளிம்ஸ் வீடியோவை ரஜினி வெளியிடுவதும் மேலும் சிறப்பம்சமாக உள்ளது.

அதேபோல் கன்னடத்தில் கிச்சா சுதீப் இந்தியில் ஆமீர்கான் ஆகியோர் இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோவை வெளியிடுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Rajamouli Superstar Rajinikanth Aamir Khan Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment