ஹாப் பாட்டில் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... ஹீரோயின்ஸ் பற்றி கிசுகிசு கேட்டார்: இளையராஜா பற்றி உண்மை உடைத்த ரஜினி!

அன்றைக்கு ஹாப் பாட்டில் பீர் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... நைட் 3 மணி வரைக்கும் தூங்க விடல, அப்போது மகேந்திரன் சார் ராஜா என்று எதோ சொல்ல வர சும்மா இருங்க சார் என்று சொல்லிவிட்டு, ஊரில் இருக்கும் கிசு கிசு எல்லாம் கேட்கிறார்.

அன்றைக்கு ஹாப் பாட்டில் பீர் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... நைட் 3 மணி வரைக்கும் தூங்க விடல, அப்போது மகேந்திரன் சார் ராஜா என்று எதோ சொல்ல வர சும்மா இருங்க சார் என்று சொல்லிவிட்டு, ஊரில் இருக்கும் கிசு கிசு எல்லாம் கேட்கிறார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Ilayaraj

இந்திய சினிமாவின் முன்னணி இசை அமைப்பளராக இருக்கும் இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது இடையில் புகுந்த ரஜினிகாந்த் அவரை பற்றி உண்மையை உடைத்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

70-களில் இறுதியில் தமிழ் சினிமாவில் இசை அமைப்பராக அறிமுகமான இளையராஜா, 1992-ல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும்வரை பல முன்னணி இயக்குனர்களில் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். குறிப்பாக புதுமுக இயக்குனர்கள் என்றால் இளையராஜா இசையை தேடி வரும் காலம் அப்போது அதிகமாக இருந்தது. அதேபோல் இவரது இசைக்காகவும் பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளது. பல புதுமுக இயக்குகனர்களின் படங்களுக்கு, இலவசமாகவே இசை அமைத்து கொடுத்துள்ளார்.

இசை மட்டும் இல்லாமல் சிம்பொனி இயற்றுவதிலும் கைதேர்ந்த இளையராஜா சமீபத்தில் லண்டனில், சிம்பொனி ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்வுக்காக இளையராஜா லண்டன் செல்லும் முன், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோல் அவர் சிம்பொனி இசை முடிந்து இந்தியா திரும்பியபோது அவருக்கு அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்எ ன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், மிஷ்கின், வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கினார். அதனைத்தொடர்ந்து இளையராஜா இசையில் வந்த ஹிட் பாடல்கள் மேடையில் பாடகர்களால் பாடப்பட்டது. இடையில் பிரபலங்கள் பலரும் இளையராஜா உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

Advertisment
Advertisements

இறுதியாக இளையராஜா பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்த நடிகர் ரஜினிகாந்த், ஜானி பட ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை பற்றி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜானி படத்தின் படப்பிடிப்பின்போது, விஜிபி கார்டனில் நடைபெற்றது. நான் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது மகேந்திரன் சாரும் இளையராஜாவும் அங்கே வந்தார்கள். நானும் மகேந்திரன் சாரும் இரவில் தண்ணி போடுவோம். அன்றைக்கும் போட்டபோது, இவர்கிட்ட கேட்டபோது ம்ம் என்று சொன்னார்.

அன்றைக்கு ஹாப் பாட்டில் பீர் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே...
நைட் 3 மணி வரைக்கும் தூங்க விடல, அப்போது மகேந்திரன் சார் ராஜா என்று எதோ சொல்ல வர சும்மா இருங்க சார் என்று சொல்லிவிட்டு, ஊரில் இருக்கும் கிசு கிசு எல்லாம் கேட்கிறார். முக்கியமா நடிகைகள் பற்றிய கிசுகிசு கேட்டார். அண்ணன் பெரிய லவ்வு அதில் இருந்து வருவது தான் இந்த பாட்டு எல்லாம். இன்னும் நிறைய இருக்கு. இன்னொரு வாட்டி நான் வச்சிக்கிநேன் என்று சொல்லிசிட்டு இறங்கிவிட்டார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Superstar Rajinikanth Isaignani Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: