விஜயின் லியோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வரும் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வித்தித்துள்ளர். அதன்படி, லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகளை திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு காட்சி அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், கலெக்டரின் தலைமையில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படம் வெளியான இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், படம் குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது
அந்த வகையில் தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பிற்காக நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் பல வருடங்களுக்கு பிறகு நெல்லை வந்துள்ளது தனக்கு பழைய நினைவுகளை வரவழைத்ததாக கூறினார். தொடர்ந்து லியோ படம் வெளியாக உள்ளது குறித்து அவரிடம் கேள்வி கேட்டப்பட்டது.
லியோ படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறிய ரஜினிகாந்திடம் பொங்கலுக்கு நம்ம படம் வருமா சார் என்ற கேள்விக்கு, பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை விஜயை குறிப்பிட்டார் என்று கூறப்பட்டது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையெ மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது லியோ படம் வெற்றியடைய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் அடுத்து தனது 171-வது படமாக லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“