பள்ளிப்பருவத்தில் நடிகர் ரஜினிகாந்த்... இதுவரை வெளிவராத மாஸ் புகைப்படம்

Tamil Cinema Update : வில்லன் கேரக்டரில் சில படங்களில் நடித்த ரஜினிகாந்த பைரவி படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார்.

Tamil Cinema Update : வில்லன் கேரக்டரில் சில படங்களில் நடித்த ரஜினிகாந்த பைரவி படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார்.

author-image
WebDesk
New Update
பள்ளிப்பருவத்தில் நடிகர் ரஜினிகாந்த்... இதுவரை வெளிவராத மாஸ் புகைப்படம்

Tamil Cinema Actor Rajinikanth School days Photo Viral : இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர், 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். தொடர்ந்து வில்லன் கேரக்டரில் சில படங்களில் நடித்த ரஜினிகாந்த பைரவி படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது

தொடர்ந்து தற்போது தனது 169-வது படமாக பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில். தற்போது எதிர்பாராத விதமாக ரஜினிகாந்தின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

publive-image
Advertisment
Advertisements

சக மாணவர்கள் பலருடன் நடுவில் கையில் கோப்பையுடன் ரஜினிகாந்த ஸ்டைலாக நிற்கிறார். இதுவரை வெளிவராத இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தலைவர் அப்போவே பெரிய மாஸ் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வரைலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: