தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் டீசர் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான அவரின் ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் சுமார் 600 கோடிக்கு அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் துசாரா விஜயன் போன்ற நட்சத்திரங்களுடன் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
இதனிடையே ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதனிடையே தலைவர் 170 படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி போல் லத்தி மற்றும் துப்பாகியுடன் நடுத்தர வயதில் தோற்றமளிக்கும் ரஜினிகாந்த், குறி வச்சா இரை விழணும் என்று சொல்வதுடன் டைட்டில் டீசர் முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“