ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதற்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது,
இதனிடையே லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் மனசிலாயோ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
இதனிடையே வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் அதே தினத்தில், வேட்டையன் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்தில், ரஜினிகாந்த் எண்டவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளதும் தெரிவந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில், வேட்டையன் படம் வெளியாக ஒரு வார காலமே உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 2) இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் மனசிலாயோ பாடல் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிரெய்லர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் தற்போது டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“