Advertisment

தர்பார் படத்திற்கு பின் மீண்டும் போலீஸ் கெட்டப் : வேட்டையன் ரஜினிகாந்த் வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வேட்டையன் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்திற்கு பின் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளது சமீபத்தில் வெளியான வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியார். பகத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகிறார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு, தூத்தக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மும்பை சென்ற படக்குழு அங்கு ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பகத் பாசில், ரஜினிகாந்த் இருவரும் பள்ளியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், படப்பிடிப்புக்கு காரில் வரும் ரஜினிகாந்த் போலீஸ் உடையுடன் காரில் இருந்து இறங்குகிறார். அவரை ரசிகர்கள் பலரும் போட்டோ எடுக்கும் நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கையசைக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வேட்டையன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே சமயம் வேட்டையன் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், வெளியாவது இது முதல்முறை இல்லை என்றாலும், அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment