தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த கரகாட்டக்காரன் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான். கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். இதன் காரணமாக இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
அதே சமயம் இந்த படத்தில் கவுண்டமணி கேரக்டரில் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர் என்பதும், நடிகர் ராமராஜன் தான் கவுண்டமணிக்கு ஆதரவாக பேசி அவரை படத்தில் நடிக்க கமிட் செய்தார் என்பதும் பலரும் அநியாத ஒரு தகவல். தமிழ் சினிமாவின் இன்றைக்கு ரீ-ரிலீஸ் செய்தாலும் பெரிய வசூலை கொடுக்கும் வகையிலான படங்களில் ஒன்றாக இருக்கும் கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம்.
ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். 2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லிய இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
தனித்தன்மையுடன் இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், வரும் வாழைப்பழ காமெடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு காமெடி காட்சியாக பேசப்பட்டு வருகிறது. காலம் கடந்து புகழ் பெற்று வரும் காரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி நடித்திருந்த தவிள் வித்வான் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன். இதை பற்றி தெரிந்த நாயகன் ராமராஜன், அவர் வேண்டாம் அவருக்கு பதிலாக கவுண்டமணி நடிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.சந்திரன் அரசியல் பேசுவார். அவரது அரசியல் வேறு எனது அரசியல் வேறு. அதுவும் இல்லாமல் இந்த படம் அரசியல் படம் அல்ல. அதனால் இந்த படத்தில் அவர் வேண்டாம். அந்த கேரக்டருக்கு கவுண்மணியை போடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இதற்கு மறுத்துள்ளனர். உடனே ராமராஜன் இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வேறு வழி இல்லாமல், இந்த படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நீக்கப்பட்டு, கவுண்டமணி உள்ளே வந்துள்ளார். கவுண்டமணி – செந்தில் – கோவை சரளா ஆகியோர் இடையோன காமெடி காட்சிகள் கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தது. இந்த படத்தின் கதை சாதாரண கதைதான் என்றாலும் கூட, காமெடி காட்சிகளுக்காக கரகாட்டக்காரன் படம் இன்றும் தனித்தன்மையுடன் உயர்ந்து நிற்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.