/indian-express-tamil/media/media_files/2025/09/12/ramesh-khanna-2025-09-12-23-01-46.jpg)
எம்.ஜி.ஆருடன் டூயட் பாடி இருக்கலாம். அவருக்கு பின் உங்களுடன் டூயட் பாடியது நான் தான் என்று நடிகை சரோஜா தேவியிடம் நேரில் கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா. எந்த படத்தில் அப்படி சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக அறியப்பட்ட ரமேஷ் கண்ணா, ஒரு இயக்குனர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பல படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், ஒரு சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இவர் கதை எழுதிய படம் மான் ஆதவன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், சூர்யா நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். மேலும், மலையாள நடிகர் முரளி, ஆனந்த் பாபு, ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குறிப்பாக இந்த படத்தில் சூர்யாவுடன் கடைசிவரை பயணிக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டர் ரமேஷ் கண்ணா நடிக்க வே்ணடிய கேரக்டர். கதை எழுதும்போதே இந்த கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ஷூட்டிங் நடந்த காலக்கட்டத்தில் வடிவேலு அரசியல் ரீதியாக, சிக்கலை சந்தித்து வந்ததால், ரெட் ஜெயண்ட் நிறுவனம் அவருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதை தெரிந்துகொண்ட ரமேஷ் கண்ணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று, என்ன சார் நான் நடிக்க வேண்டிய கேரக்ர் அவருக்கு போய்டுச்சே என்று சொல்ல, அவரோ அதான் கதை என்று உன் பெயர் வருதுல்ல, அது போதும் போ என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால், டிஷ்கசனில், சரியாக கவனம் செலுத்ததா ரமேஷ் கண்ணா, தான் நடிக்க டம்மியாக ஒரு கேரக்டரை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து அந்த கேரக்டரை தூக்கினாலும் கதைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்று லட்சியத்தில் தனது முறை பெண்ணை காதலிக்கும் இலைமான் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரின் அறிமுக காட்சியில், அன்று வந்ததும் அதே நிலை என்று பாடல் பாடிக்கொண்டு வருவார். அதற்கு அவரும் இணைந்து பாடிருப்பார். படத்தின் காட்சி முடிந்தவுடன், உங்க கூட எம்.ஜி.ஆர் டூயட் பாடினார். அதன்பிறகு டூயட் பாடியவன் நான் தான் என்று கூறியுள்ளார். அப்போது சிரித்த அவர் அதன்பிறகு ரமேஷ் கண்ணா மீது பாசமாகியுள்ளார். இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.